21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச சித்த மருத்துவ மாநாடு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச சித்த மருத்துவ மாநாட்டை சிறப்பாக நடத்தியது. இந்த மாநாடு பொது சுகாதாரத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு 2025 என்ற தலைப்பில் நடைபெற்றது. 


இந்த மாநாட்டில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு விழா பேரூரையாற்றினார். இவ்விழாவில் மதிப்பிற்குரிய துணைவேந்தர் பேரா.மரு.கி.நாராயணசாமி தலைமையுரை ஆற்றினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா ஆயுஸ் அமைச்சகத்தின் ஆயுர்வேத ஆலோசகர் மருத்துவர் கௌஸ்துபா உபத்யாயா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் மரு N.கபிலன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த மாநாட்டில் மொத்தம் 1126 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 102 சித்த மருத்துவ ஆசிரியர்களும், 789 பட்டப் மேற்படிப்பு மாணவர்களும் (MD Siddha), 235 பட்டப் படிப்பு மாணவர்களும் (BSMS) கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் மொத்தம் 517 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தனர். அதில் 274 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 127 கட்டுரைகள் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது. 147 ஆய்வு கட்டுரைகள் பலகை பதிவாக (Poster Presentation) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. இந்த சர்வதேச மாநாட்டின் மலரில் நான்கு சிறப்பு பேச்சாளர்களின் முழு கட்டுரைகளும், 274 ஆராய்ச்சி கட்டுரைகளின் சுருக்கமும் ஆக மொத்தம் 278 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. இந்த கட்டுரை சுருக்கங்களில், மருத்துவ ஆசிரியர்களின் 50 கட்டுரைகளும், மருத்துவம் தொடர்புடைய Life Science லிருந்து 12 கட்டுரைகளும், பட்டபடிப்பு மாணவர்களிடமிருந்து 117 ஆய்வுக் கட்டுரைகளும் பட்டமேற்படிப்பு மாணவர்களிடமிருந்து 95 ஆராய்ச்சி கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளது. இந்த சர்வதேச மாநாட்டில் இலங்கையிலிருந்து இரண்டு பேராசிரியர்கள் நேரடியாகவும். 

மூன்று பேராசிரியர்கள் வலைத்தளம் மூலமாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், கேரளாவிலிருந்து சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களும் நேரடியாக பங்கு பெற்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள 16 சித்த மருத்துவக் கல்லூரிகளின் சித்த மருத்துவ பேராசிரியர்களும், மருத்துவ மாணவர்களும் பெருந்திரளாக கருத்தரங்கில் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.