கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற
திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று
(21.2.2025) கடலூருக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.
ஸ்டாலின் அவர்களுக்கு. பொதுமக்கள் வழிநெடுகிலும் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு
அளித்தனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்று
பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக்
கொண்டு, அவர்களுடன் உரையாடி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்
கொண்டார்.
மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் பொதுமக்கள் செல்பி புகைப்படம்
எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற
விழாவில். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.
கடலூர் மாவட்டத்தில் 704 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் 602 முடிவுற்ற பணிகளை
திறந்து வைத்து, 384 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப்
பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 386 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட
உதவிகளை 44,689 பயனாளிகளுக்கு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் முடிவுற்ற
திட்டப்பணிகளை திறந்து வைத்த விவரங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் வரக்கால்பட்டு,
எய்தனூர், அரசடிக்குப்பம், கீழக்குப்பம், சேமக்கோட்டை, அரியகோஷ்டி. சேப்லாநத்தம்
வடக்கு. ராமாபுரம், கோழை ஆகிய 9 கிராம ஊராட்சி செயலகக் கட்டடங்கள்; நபார்டு
திட்டத்தின் மூலம் நத்தப்பட்டு, ஒரையூர், அரசடிக்குப்பம், பூங்குணம்.
கீழ்மாம்பட்டு, மனப்பாக்கம், தீர்த்தாம்பாளையம், பூதங்குடி உள்ளிட்ட 61 மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டிகள்: அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின்
மூலம் கொங்கராயனூர். பூவாணிக்குப்பம், வீரநல்லூர், எம்.பரூர் ஆகிய 4 சமுதாயக்
கூடங்கள்;
நபார்டு திட்டத்தின் மூலம் 79.48 கி.மீ நீள 37 கிராமப்புற சாலைகள்,
புல்லூர்-கீரனூர் 160060 மற்றும் மேலபாளையூர்-ஆதனூர் சாலையில் 2 பாலங்கள் உட்பட
குளம் தூர்வாருதல், வண்ணக்கற்கள் பதித்தல், அங்கன்வாடிமற்றும் நியாயவிலைக்கடை
பழுதுநீக்குதல் போன்ற பல்வேறு பணிகள் என 72 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் 225
முடிவுற்றப் பணிகள்: பள்ளிக்கல்வித் துறை சார்பில், வீரப்பெருமாநல்லூர்,
பூண்டியாங்குப்பம், வேணுகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அழகியநத்தம்
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 20 வகுப்பறைக் கட்டடங்கள், 4 ஆய்வகங்கள். 4 கழிப்பறைகள்
மற்றும் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா கட்டடம், 152 பள்ளி சுற்றுச்சுவர்கள்,
புனரமைக்கப்பட்ட 97 தொடக்கப் பள்ளி கட்டடங்கள். 63 நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் என
23 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் 317 முடிவுற்றப் பணிகள்: வணிகவரி மற்றும்
பதிவுத் துறை சார்பில் 11 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள
சிதம்பரம் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் பரங்கிப்பேட்டை,
ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: பொது நூலகத்துறை
சார்பில், விருத்தாசலம், தொளார். குமராட்சி, சேப்பாக்கம், நல்லூர் கிளை நூலகக்
கட்டடங்கள். ஒறையூர், மிராளூர். பரிவிளாகம் ஆகிய ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள் என 3
கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடங்கள்: கால்நடை
மற்றும் பராமரிப்புத் துறை சார்பில், சி.என்.பாளையம் அரசு கால்நடை மருந்தகக்
கட்டடம், சேத்தியாத்தோப்பு பால்பண்ணை. சோனாங்குப்பம், சித்திரைப்பேட்டை மற்றும்
நஞ்சலிங்கம்பேட்டையில் மீன்பிடி இறங்குதளங்கள், பரங்கிப்பேட்டை மற்றும்
லால்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட மீன்விதைப் பண்ணைகள், மேலப்பளையூர் பால் கொள்முதல்
நிலையம், என 21 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் 8 முடிவுற்ற பணிகள்: மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் இரண்டாம் நிலை எம்.சி.எச் கட்டடம். மங்களூர் வடகராம்பூண்டி மற்றும்
ஆலத்தூர் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையக் கட்டடங்கள், நடுவீரப்பட்டு சித்த
மருத்துவப்பிரிவு கட்டடம், பண்ருட்டி-மருங்கூர் பொது சுகாதார நிலையக் கட்டடம்,
தட்டாம்பாளையம், கலியமலை துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், வில்லியனூர்.
வடகிருஷ்ணாபுரம் வட்டார சுகாதார நிலையக் கட்டடங்கள், என 13 கோடியே 77 இலட்சம்
ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகள்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு
வாரியம் சார்பில், ம.புடையூரில் 8 பள்ளி வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வுக்கூடம்,
பழஞ்சநல்லூர் பல்நோக்கு மையம், அகரம் மற்றும் ஸ்ரீராஜகணபதிநகரில்சமுதாயக்கூடங்கள்.
என 4 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகள்: நகராட்சி நிருவாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சிதம்பரம் அறிவுசார் மையம், நகராட்சி
பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், விருத்தாசலத்தில் துணை சுகாதார நிலையம்,
நல்லேரி மற்றும் அய்யனார் கோயில் குளம் தூர்வாரி மேம்படுத்துதல், பண்ருட்டி
நகர்ப்புற சுகாதார நிலையம், டி.ராசாப்பாளையம், விழமங்களம், நகராட்சி துவக்கப்
பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், பொதுக் கழிப்பறை. திட்டக்குடியில்
நகராட்சி அலுவலகக் கட்டடம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம், என 13 கோடியே 35
இலட்சம் ரூபாய் செலவில் 11 முடிவுற்ற பணிகள்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
சார்பில், திட்டக்குடி, பெண்ணாடம். மங்கலம்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி,
கெங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம். மங்களூர், நல்லூர் ஆகிய
ஊராட்சிகளில் உள்ள 6,68,000 பொதுமக்களுக்கு 479 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு
135 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம்: கூட்டுறவுத் துறை சார்பில், 1
கோடியே 26 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியின்
பண்ருட்டி கிளைக் கட்டடம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
சார்பில், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம். சி.புதுப்பேட்டை ஊராட்சி
அரியகோஷ்டியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள், செம்மண்டலம் (குண்டுசாலை)
பகுதியில் 272 அடுக்குமாடி குடியிருப்புகள் 6TOOT 57 கோடியே 96 இலட்சம் ரூபாய்
செலவில் 560 அடுக்குமாடி குடியிருப்புகள்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
சார்பில், மேலப்பாளையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம், பரங்கிப்பேட்டை மற்றும்
பின்னத்தூர் பகுதிகளில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், முட்டம்.
கருங்குழி. கூடுவெளிச்சாவடி, விஜயமாநகரம் ஆகிய இடங்களில் உலர் கலத்துடன் கூடிய தரம்
பிரிப்புக் கூடங்கள் மற்றும் கடலூர் உழவர் சந்தையில் உழவர் அங்காடி, நடமாடும்
LD-600T பரிசோதனை வாகனம். 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 10 முடிவுற்ற பணிகள்:
என மொத்தம் 704 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் 602 முடிவற்ற பணிகளை மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.கடலூர் மாவட்டத்தில் புதிய
திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய விவரங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
சார்பில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குமனன்குளம்,
சான்றோர்பாளையம், வழிசோதனைபாளையம், சாத்தான்குப்பம், கொட்டிகோனங்குப்பம் உள்ளிட்ட
இடங்களில் 188 கி.மீ நீள 119 சாலைப் பணிகள், தம்பிப்பேட்டை காலனி,
கிளிஞ்சிக்குப்பம் ஆகிய இடங்களில் 2 பாலங்கள், புதுக்கடை (இருளர் காலனி),
காடாம்புலியூர் (தொல்குடி குடியிருப்பு). முத்தையாள்பேட்டை, தாண்டவராயசோழகன்பேட்டை,
ஓமாபுலியூர். குமராக்குடி. தீத்தாம்பட்டு, மேலூர், ராமநத்தம், சிறுப்பாக்கம் ஆகிய
இடங்களில் 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்: கோத்தேரியில் கழிவுநீர்
சுத்திகரிப்பு நிலையம், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மதி அங்காடி, என 120
கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 133 பணிகள்: பள்ளிக்கல்வித் துறை சார்பில்,
பண்ருட்டி, மாளிகைமேடு, சிதம்பரம். விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, வேப்பூர்,
பு.முட்லூர் மற்றும் திருத்துறையூர் ஆகிய பள்ளிகளில் 55 வகுப்பறைக் கட்டடங்கள்,
ஆய்வுக்கூடம், குடிநீர் இணைப்பு, கடலூர், அண்ணாகிராமம், நல்லூர், ஸ்ரீமுஷ்ணம்,
குமராட்சி, கீரப்பாளையம் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியங்களில் 20 தொடக்கப்
பள்ளி வகுப்பறை கட்டடங்கள் என 21 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28
பணிகள்: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை சார்பில், 3 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சி.முட்லூர் அரசு
கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
சார்பில். வேப்பூர் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டடம், 15-வது நிதிக்குழு
மானியத் திட்டத்தின் மூலம் கடலூர், அண்ணாகிராமம், குமராட்சி வட்டார பொது சுகாதார
மையங்கள், மேல்புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் துணை சுகாதார நிலையங்கள், பரங்கிப்பேட்டை
ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையங்கள். என 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 பணிகள்:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடலூர் மாநகராட்சியில்,
173 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9-வது வார்டில் பகுதியாகவும், 27
மற்றும் 48-வது வார்டுகளில் முழுமையாகவும் என 27 மாநகர் பகுதிகளில் 148.7 கி.மீ
நீளத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்;
அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் 26 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருதாடு,
தென்பெண்னையாற்றில் கிணறு அமைத்து 5,409 குடியிருப்புகளுக்கு குடிநீர்
விநியோகிக்கும் திட்டம்; 1 2 3 4கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 7
கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை,
வணிக வளாகம்: பேரூராட்சித்துறை சார்பில். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 5
கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீமுஷ்ணத்தில் கசடு கழிவுநீர் மேலாண்மைத்
திட்டம், பெண்ணாடம் மற்றும் மங்கலம்பேட்டையில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்: வேளாண்மை மற்றும் உழவர்
நலத்துறை சார்பில் சி.என். பாளையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம்
16 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பண்ருட்டி பலா மதிப்புகூட்டு மையம்: என
மொத்தம், 384 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். கடலூர் மாவட்டத்தில்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத் துறை சார்பில் 11.716 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா, நிலவரித்திட்ட பணி
பட்டா, கணக்கு திருத்தம் பட்டா, ஆதிதிராவிடர் நலத்துறை இ-பட்டா,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இ-பட்டா, TNHB விற்பனை பத்திரத்தின்படி பட்டாக்கள்,
84 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, 61 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, 367
பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்குகளுக்கான உதவித் தொகை, 4
பயனாளிகளுக்கு விபத்து நிவாரணத் தொகை; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
சார்பில் 500 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளுக்கான சாவி
வழங்குதல், 4300 பயனாளிகளுக்கு ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில் உதவிகள்.
225 பயனாளிகளுக்கு பழங்குடியினர் வீடுகட்டும் திட்டத்தில் உதவிகள்; மகளிர்
திட்டத்தில் 16,815 பயனாளிகளுக்கு வங்கிக்கடன் இணைப்பு:
வேளாண்மை மற்றும் உழவர்
நலத் துறை சார்பில் 580 பயனாளிகளுக்கு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு
இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்,
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சிவேளாண்மை மற்றும்
தோட்டக்கலைத் துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய
வேளாண்மை வளர்ச்சி திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி பகுதி
மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்; வேளாண்மை பொறியியல் துறை சார்பில்
52 பயனாளிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர். கரும்பு அறுவடை இயந்திரம், உழுவை
இயந்திரங்கள் வழங்குதல்; கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
சார்பில் 4393 பயனாளிகளுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் கடன், கல்விக் கடன்,
கைம்பெண்கள் கடன், சிறுகுறு நடுத்தர நிறுவனக் கடன், கால்நடை பராமரிப்புக் கடன்,
மகளிர் தொழிற்முனைவோர் கடன், பயிர்க்கடன், மத்திய காலக் கடன், மாற்றுத்திறனாளி
கடன், கால்நடை பராமரிப்புக் கடன் போன்ற உதவிகள்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்
துறை சார்பில் 415 பயனாளிகளுக்கு, ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண
நிதி உதவி திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், சத்தியவாணி
முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களில்
உதவிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு,
பித்தளை தேய்ப்பு பெட்டி, இலவச தையல் இயந்திரம் வழங்குதல்; தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் 190 பயனாளிகளுக்கு
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான
தொழில் முனைவு திட்டம், நன்னிலம் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில்
உதவிகள்; உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 2121
பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல்; மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத் துறை சார்பில் 190 பயனாளிகளுக்கு, மக்களைத் தேடி மருத்துவம், டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்குதல்; 3 4 5
6மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு, இணைப்பு சக்கரங்கள்
பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 16 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும்
8 கிராம் தங்க நாணயம் வழங்குதல்; மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் 33
பயனாளிகளுக்கு, உள்நாட்டு மீனவர்களுக்கு மானியத்தில் நைலான் மீன்பிடி வலை வழங்கும்
திட்டத்தில் மானியத் தொகை வழங்குதல், மானிய விலையில் கண்ணாடி நாரிழைப்படகு,
வெளிபொருத்து இயந்திரம், குளிர்காப்பு பெட்டி மற்றும் மீன்பிடி வலைகள் போன்ற
திட்டங்களில் உதவிகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 44,689
பயனாளிகளுக்கு 386 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார். இந்த விழாவில், மாண்புமிகு
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு வனம் மற்றும்
கதர்த்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை
அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை
அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர். மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வெ.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஷ்ணு
பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜி. ஐய்யப்பன். திரு. சபா. இராஜேந்திரன்,
திரு.தி.வேல்முருகன், திரு.இராதாகிருஷ்ணன், திரு. சிந்தனைச்செல்வன், கடலூர் மாவட்ட
ஆட்சித் தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.