தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்' விழாவினை
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன்
அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.12.2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களி பிறந்தநாள், 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக்'
கொண்டாடப்படும் என்று அறிவித்ததன் அடிப்படையில், தமிழ்த்தாத்தா டாக்டர்
உ.வே.சாமிநாதையர் அவர்களின் 171-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை
சார்பில் நடைபெறும் 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்' விழாவினை மாண்புமிகு தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் இன்று
(19.02.2025) தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 'தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழாவில்
ஆற்றிய உரை தமிழ்த்தாத்தா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட நினைவில் வாழும்
உ.வே.சாமிநாதையர் அவர்களுடைய 171-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்
துறையின் சார்பில், "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்" விழா என்கின்ற வகையில்,
இன்றைக்கு சிறப்போடும், மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி
நடைபெறுகின்றது. இன்றைக்கு தமிழ்த்தாத்தா அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு, 'தமிழ்
இலக்கிய மறுமலர்ச்சி நாள்' என்கின்ற வகையில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் விழாவாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்கள்.
ஏதோ விழா என்பதற்காக ஒரு
அரசிற்கு மதிப்பு ஏற்படும் என்பதற்காக அல்ல. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் அய்யா
அவர்கள் தமிழுக்காக ஆற்றியிருக்கக்கூடிய பணிகளுக்காக இன்றைக்கும் நாம்
தமிழ்த்தாத்தா அவர்களுக்கு இந்த விழாவை நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த
வகையில், இந்தத் துறையின் அமைச்சர் என்கின்ற முறையில், நம்முடைய மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் இந்த
நேரத்தில் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியை நான் உரித்தாக்கிக் கொள்ள
கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மகுடம் சூட்டும் வகையில்
தான், அன்னாரது பிறந்தநாளை நாம் தமிழ் இலக்கிய மறுவளர்ச்சி நாளாக மலரச் செய்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும். மாண்புமிகு துணை முதலமைச்சர்
அவர்களுக்கும் இந்த நேரத்தில் நான் மீண்டும் மீண்டும் நான் நன்றியை உரித்தாக்கிக்
கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழையும், உ.வே.சாமிநாதையர் அவர்களையும் பிரித்துப்
பார்க்க இயலாது என்று சொல்வார்கள். அதேபோல, தமிழனின் தொன்மைக்கு சான்றளிக்கும்
வகையில், தங்கப்பட்டயமாக சங்க இலக்கியங்களை நமக்கு தந்தவர். இங்கே பேசிய அனைவரும்
உ.வே.சாமிநாதையர் அவர்களை பற்றி விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
பிறந்தநாளை முன்னிட்டு, நம்முடைய வேண்டுகோளை ஏற்று துறையின் அழைப்பை ஏற்று,
நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களும் இங்கே வந்து படத்திற்கு. திருவுருவச்
சிலைக்கு மரியாதை செய்து விட்டு, அவசர அவசரமாக சென்னையில் தலைமைச் செயலகத்தில்,
இன்று ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்குவதற்கான நிதிநிலை தாக்கல் செய்வதற்கான ஆலோசனை
கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில் நானும் செல்லவேண்டிய ஒரு சூழ்நிலை
இருக்கிறது. எனவே, அவருக்கும் இந்த நேரத்தில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நிதிநிலை தாக்கல் செய்வதற்கான ஆலோசனை கூட்ட நிகழ்ச்சிக்கு செல்லவேண்டியும்
இருக்கின்ற காரணத்தால், நிச்சயமாக இந்த நிகழ்ச்சி தொடர்பான அனைத்து கருத்தரங்கங்கள்
மற்றும் நிகழ்வுகளையும் ஒளிநாடா மூலமாக நான் கண்டறிய இருக்கிறேன். முதல் ஆண்டு
நிகழ்ச்சி இன்றைக்கு சிறப்பாக துவங்கி இருக்கிறது. அதே நேரத்தில், மாணவச்
செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டிருக்கிறீர்கள். நானும் உங்களைப் போன்று கல்லூரி
மாணவனாக இருந்தபோது, அன்றைக்கு சட்டமன்றத்தில் 1986-ஆம் ஆண்டு மாற்று ஆட்சி
நடைபெற்றுக் கொண்டிருந்தபோது. ஒன்றிய அரசால், இந்தி திணிப்பு என்ற சூழ்நிலை வந்த
காரணத்தால், அந்த சட்ட நகலை எரித்ததில் நானும் ஒருவன் என்பதை இந்த நேரத்தில் நான்
பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.
அதன் காரணமாக, 45 நாட்களாக கோவை
மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். எனவே, இந்தத் தமிழை யாராலும் தொட்டுப்
பார்க்க முடியாது என்பதற்கு இன்றைக்கு நம்முடைய பல்வேறு சான்றோர்கள், பல்வேறு
கட்சித் தலைவர்கள் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இன்றைக்குக்கூட
மும்மொழித் திணிப்பு மூலம் தமிழ் மொழிக்கு இருக்கக்கூடிய மகத்துவத்தை சிதைத்துப்
பார்க்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதைத்தான் நம்முடைய மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் கண்டனத்தின் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை மீண்டும் தமிழ்நாட்டில் வந்துவிடுமோ என்ற
சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அதையெல்லாம் தடுப்பதற்காக தான் நம்முடைய
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதல் தொண்டனாக இன்றைக்கு நின்று
கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எந்த பாதிப்பு வந்தாலும், அதையெல்லாம்
தகர்த்தெறியக்கூடிய பட்டாளங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை ஆங்காங்கே இரண்டு.
மூன்று நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நிகழ்வுகள்
சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்ற இன்று நடைபெறவுள்ள பட்டிமன்றம் மற்றும்
கருத்தரங்க நிகழ்ச்சிகள் இன்று மாலை வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த
நிகழ்ச்சியில் உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில், எவ்வளவோ நேரங்கள்
எதற்காகவோ நாம் வீண்செய்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் நம்முடைய தாய்மொழி
தமிழுக்காக வித்திட்ட நம்முடைய தமிழ்த்தாத்தா போன்றவர்களுக்கு நாம் மரியாதை செய்வது
என்று சொன்னால், இன்றைக்கு இந்த நிகழ்ச்சி முழுதும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்
என்று உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றி. நிகழ்ச்சி
சிறப்பாக நடைபெற வாழ்த்து கூறி விடைபெறுகிறேன். அதனை தொடர்ந்து முனைவர்
கு.ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. உ.வே.சாமிநாதையரும்
சுவடி தேடலும்' என்ற தலைப்பில் முனைவர் ப.சரவணன் அவர்களும் 'உ.வே.சாமிநாதையரின்
பதிப்புச் செம்மை' என்ற தலைப்பில் முனைவர் க.பலராமன் அவர்களும் உ.வே.சாமிநாதையரின்
சிந்தாமணிப் பதிப்பு' என்ற தலைப்பில் முனைவர் மு.முத்துவேல் அவர்களும்
'உவே.சாமிநாதையரும் காந்தியும்' என்ற தலைப்பில் திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன்
அவர்களும் 'உ.வே.சாமிநாதையரின் நன்றி மறவாப் பண்பு' என்ற தலைப்பில் முனைவர் சீதாபதி
ரகு அவர்களும் 'உ.வே.சாமிநாதையரின் உரைநடைப் பங்களிப்பு' என்ற தலைப்பில் முனைவர்
இரா.வெங்கடேசன் அவர்களும் கருத்துரை வழங்கினர்.
கருத்தரங்க நிகழ்வைத் தொடர்ந்து
"தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிப் பங்களிப்பில் பெரிதும் விஞ்சி நிற்பது
உ.வே.சாமிநாதையரின் பழந்தமிழ்ப் பற்றே! நவீனப் பதிப்பு நெறிகளே!" என்ற தலைப்பில்
நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு தாமல் கோ. சரவணன் அவர்கள் நடுவராகவும் பழந்தமிழ்ப்
பற்றே! என்ற தலைப்பில் செல்வன் நா. பூபாலக்கண்ணன், செல்வி அ. இராஜேஸ்வரி, செல்வன்
மா. சரண்ராஜ் ஆகியோரும் நவீனப் பதிப்பு நெறிகளே! என்ற தலைப்பில் செல்வி ர.தமிழ்,
செல்வி நொ.சுபலட்சுமி, செல்வன் அ.முகிலன் ஆகியோரும் பங்கேற்று வாதித்தனர். முன்னதாக
தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் 171
வது பிறந்த நாளையொட்டி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச்
சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு
மாண்புமிகு நிதி. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம்
தென்னரசு அவர்கள், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.
மு.பெ. சாமிநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (19.2.2025) மலர் தூவி மரியாதை
செலுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் அமைச்சர் திரு. மு.
பெ. சாமிநாதன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு அளித்த
பேட்டியில் தெரிவித்ததாவது மக்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய நினைவில் வாழும்
அய்யா உ.வே. சாமிநாதையர் அவர்களுடைய 171-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஆண்டுதோறும் நடத்தக்கூடிய வகையில்
அரசின் சார்பில் இவருடைய பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக எடுக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கு இன்றைக்கு நம்முடைய மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு மலர்
தூவி மரியாதை செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இங்கு இருக்கின்ற தமிழ்
சான்றோர்களும், கல்லூரியில் இருக்கக்கூடிய நம்முடைய பேராசிரியர் பெருமக்கள். மாணவ
செல்வங்கள்.
பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களுடைய மரியாதையை செலுத்தி
இருக்கிறார்கள். ஓலைச் சுவடிகளையெல்லாம் கண்டறிந்து அச்சேற்றம் செய்து இந்த
உலகிற்கு தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், தமிழைப் பற்றியும் ஒரு உணர்வுகள்
ஏற்படுத்தும் வகையில் முத்திரைப் படைத்தவர். எனவே, அய்யா அவர்களது பிறந்தநாளை
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்" என்று தலைப்பு
வைத்து இந்த ஆண்டு முதல் அவ்விழா கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதன்
அடிப்படையில் தமிழக அரசின் வரலாற்றில் இந்த ஆண்டு முதல் "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி
நாள்" விழா துவங்கியிருக்கின்றது. அதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவு
தான் காரணம்.
அந்த வகையில் இன்றைய தினம் மாநிலக் கல்லூரியில் கவியரங்கம்,
பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் இன்று மாலைவரை நடைபெற இருக்கின்றது. இதில்
தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்தை எடுத்துசொல்ல இருக்கின்றார்கள்.
மாணவ செல்வங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இனி
ஆண்டுதோறும் நம்முடைய உ.வே.சா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் இலக்கிய
மறுமலர்ச்சி நாள் விழா அரசின் சார்பில் கொண்டாடப்படும். கேள்வி பாரதியாரின் பெயரில்
பல்கலைக் கழகங்கள் இருந்தும் அவருக்கான இருக்கைகள் இல்லையென்று சொல்லி ஆளுநர் ஒரு
குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார்? அது பற்றி...... மாண்புமிகு அமைச்சர் அவர்களின்
பதில் மேதகு ஆளுநர் அவர்கள் ஒரு அரசுக்கு ஆலோசனை சொல்வதாக இருந்தாலும் சரி, வேறு
எதுவாக இருந்தாலும் சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும் குறிப்பின் மூலமாக அதிகாரிகள்
மூலமாக தங்களுடைய கருத்துகளை சொன்னால் நலமாக இருக்கும் .
இது வேண்டுமென்றே ஒரு
குற்றச்சாட்டை சொல்வது போல் தான் அமைகின்றதே தவிர, இது மேதகு ஆளுநர் அவர்களின்
பொறுப்புக்கு அழகல்ல என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு
தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.எம்.வி.பிரபாகர
ராஜா, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.
இரா. வைத்திநாதன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் திரு. மு.பா.அன்புச்சோழன் (மக்கள்
தொடர்பு). கல்லூரி கல்வி இயக்கம் மற்றும் முதல்வர் திரு.இரா.ராமன், முனைவர்
கு.ஞானசம்பந்தன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் பங்கேற்றனர்.