மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்விக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் பதில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் 2642 மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் வழங்குகிறார் - மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மேல்நிலைப்பள்ளியின் 55ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று விழா பேருரையாற்றினார். 
60000 மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (17.02.2025) மண்டலம் 10, வார்டு 142, சைதாப்பேட்டை, மாந்தோப்பில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 55வது ஆண்டு விழாவில் பங்கேற்று அதிக மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி விழா பேருரையாற்றினார்கள். பின்னர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 55வது ஆண்டு விழா சென்னை மாநகராட்சியின் பள்ளிக்கல்வித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் இன்றைக்கு மிகச் சிறப்பான வகையில் சென்னைக்கு பெருமைத் தேடி வருகிறது. அந்தவகையில் சைதாப்பேட்டையில் பல ஆண்டுகளாக பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கும் பள்ளியாக மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளங்கிக் கொண்டிருக்கிறது. 

ஆண்டுதோறும் மருத்துவர்கள். பொறியாளர்கள் OT OUT மாணவிகள் இப்பள்ளியில் இருந்து செல்லும் நிலை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகச் சிறந்தவகையில் சென்னையில் முதல் மாநிலப் பள்ளி என்கின்ற பெயரை கடந்த ஆண்டு இப்பள்ளி பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட இப்பள்ளியில் 55 வது ஆண்டு விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற்றுள்ளது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுக்களும், பரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்துவதற்கும். வளர்ச்சிக்கும் ஏராளமாக திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உயர் வகுப்புகளுக்கு செல்வதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- தரப்படும் திட்டம் என்பது தமிழ்நாட்டில் பெரிய அளவில் பிரசித்துப் பெற்ற திட்டமாக உள்ளது. 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் பெரிய அளவில் பயன்பெற்று வருகின்றார்கள். புதுமைப் பெண். தமிழ்ப் புதல்வன் என்கின்ற வகையிலான திட்டங்களின் பெயர்களோடு இத்திட்டங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்துக் கொண்டிருக்கிறது. அதோடுமட்டுமல்லாமல் நான் முதல்வன் எனும் திட்டத்தின்படி, 28 இலட்சம் மாணவ, மாணவியர்கள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி பெற்று, பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற்று, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் வேலைகளுக்குச் செல்கின்ற ஒரு அற்புதமான நிலை இருந்துக் கொண்டிருக்கிறது. எனவே அந்தவகையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, கல்வித் திறனும் உயர்ந்திருக்கிறது. பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதமும் உயர்ந்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இந்தப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஏராளமான மாணவியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். 

மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்விக்கு 

மக்கள் நல்வாழ்வுத்துறையைப் பொறுத்தவரை ஒரு சிறப்புக்குரிய செய்தி, ஏற்கெனவே 2553 மருத்துவர் காலிப் பணியிடங்களுக்கு கடந்த 05.01.2025 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 4585 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய காலிப்பணியிடம் 2553 மற்றும் கூடுதலாக 89 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு 2642 மொத்தக் காலிப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சாரிபார்ப்புகள் 12.01.2025 முதல் 15.01.2025 ஆகிய 4 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு 2642 மருத்துவர் காலிப்பணியிடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படவிருக்கிறது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக புதிதாக பணியில் சேரும் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த 2,642 பேருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களுக்கு பணியில் அமர்த்தப்படவிருக்கிறார். இன்னும் 10 நாட்களுக்குள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் தேர்வு செய்யப்படவிருக்கும் 2,642 மருத்துவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் முதல்முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவத்துறையில் மருத்துவ காலிப்பணியிடங்கள் காலி இல்லை என்கின்ற ஒரு நிலை இன்னும் 10 நாட்களில் உருவாகவிருக்கிறது.1021 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு:- அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டில் ஒரு 1.021 மருத்துவர்கள் நியமித்தோம். அந்த மருத்துவர்களுக்கு அப்போது சொல்லப்பட்ட அறிவுரை என்பது ஓராண்டு காலம் நீங்கள் அதிக காலிப்பணியிடங்கள் இருக்கிற ஒரு 20 மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் என்று சொல்லி, அதற்கும் கலந்தாய்வு நடத்தி அவர்களை அங்கு அனுப்பி வைத்தோம். அவர்களுக்கு அப்போது சொல்லப்பட்டது, இந்த ஓராண்டு காலம் பணிமாறுதல் கேட்கக்கூடாது. 

அந்த வகையில் இந்த 1,021 மருத்துவர்களும் மிகசிறப்பாக இந்த துறைக்கு ஒத்துழைப்பை தந்து ஓராண்டு காலம் பணியாற்றினார்கள். அவர்களுக்கும் கடந்த 3 நாட்களாக பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர் விரும்புகிற இடங்களில் ஒளிவு மறைவற்ற தன்மையில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி ஆணைகள் தயாராக இருக்கிறது. வருகிற 20.02.2025-ஆம் தேதி என்னால் பணியிடமாறுதல் ஆணைகள் DPH-DMS வளாகத்தில் தரப்படவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டல குழுத் தலைவர் திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஸ்ரீதரன், திரு.ப.சுப்பிரமணி, திரு.தா.மோகன்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி.ஆர்.பத்மஜா மற்றும் அரசு உயரலுவலர்கள், பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.