திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் நலத்திட்டங்களை வழங்கியும் சிறப்பித்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.1304.66 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ. 309.05 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். 
திருநெல்வேலி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று (6.2.2025) திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை திறந்து வைத்து, 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனம் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். 

அதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மகாத்மா காந்தி தினசரி சந்தையில் 40 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் காய்கனி சந்தை மற்றும் டவுன் நயினார் குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், என மொத்தம் 66 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

 பின்னர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ். 11 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதன் தொடர்ச்சியாக. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.2.2025) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1304.66 கோடி ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்நீர்வளத்துறை சார்பில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு உபரி நதிநீர் இணைப்புத் திட்டம் தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ளநீரில் வினாடிக்கு 3200 கனஅடி வீதம் 10 நாட்களுக்கு 2765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைப்பதே நோக்கமாக கொண்டது 1060 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிலான தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு உபரி நதிநீர் இணைப்பு வெள்ளநீர்க் கால்வாய் திட்டம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 21.02.2009 அன்று 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

 இத்திட்டத்தில் மொத்தமுள்ள 75.175 கிலோ மீட்டரில், திருநெல்வேலி மாவட்டத்தில் 67.075 கி.மீ பணிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீட்டரில் 6.455 கி.மீ பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் 14.084.98 ஹெக்டேர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8,905.02 ஹெக்டேர் நிலங்களும், என மொத்தம் 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தின் மொத்த நீளம் 75.175 கிலோ மீட்டராகும். தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு உபரி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் பயன்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதினால் திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள். 177 குளங்கள். 2657 கிணறுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள். 2563 கிணறுகள், என மொத்தம் 50 கிராமங்கள். 252 குளங்கள். 

5220 கிணறுகள் பயன்பெறும். தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்தபோது 13.12.2024 முதல் 19.12.2024 வரை கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு, வெள்ள நீர்க் கால்வாய் வழியாக கருமேனியாறு திருப்பு அணை. சுவிசேஷபுரம் குளம், இடையன்குடி வழங்கு கால்வாய் மற்றும் நம்பியாறு இணைப்புக் கால்வாய் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்திட்டத்தின் மூலமாக, தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை 75 கிலோமீட்டர் நீளத்துக்கு கால்வாய் மூலம் பகுதிகளான திசையன்விளை மற்றும் சாத்தான்குளத்துக்கு செல்லப்படும். வறட்சிப் கொண்டு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருநெல்வேலியில் 11 பேரூராட்சிகளில் 9 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சந்தை மற்றும் பேருந்து நிலையம், 3 புதிய துணை சுகாதார நிலையங்கள், 2 புதிய சமுதாய நலக்கூடங்கள், அங்கன்வாடி மையம், ரேசன் கடை, கழிவுநீர் ஊர்திகள். டிப்பர் ஆட்டோ மற்றும் டிராக்டர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மானூர் ஊராட்சிஒன்றியத்தைச் சார்ந்த 22 ஊரக குடியிருப்புகளுக்கான 19 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம்; ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 20 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், பல்நோக்கு மையங்கள். பொது நூலகங்கள் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 290 மின்கல வாகனங்கள்: 

வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில், அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 300 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் 1000 மெ.டன் சேமிப்பு கிடங்கு. வேளாண் நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், ஆண்டுக்கு சுமார் 4000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை வாகனம்; மெகா உணவுப் பூங்கா: திருநெல்வேலி மாவட்டம். திருநெல்வேலி மற்றும் மானூர் வட்டம். கங்கைகொண்டான் மற்றும் பிராஞ்சேரி கிராமங்களை உள்ளடக்கி 1991.59 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்கா தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 

இந்த தொழிற்பூங்காவில் தொழில் மற்றும் வணிக மனைகள், பசுமை பூங்கா, எல்காட், உணவுப் பூங்கா, தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு தொழில் மனைகள் குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் ஒரு மெகா உணவுப்பூங்கா ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா 2021-22 திட்டத்தின் நிதி. நபார்டு வங்கி நிதி, மாநில அரசு மானியம் மற்றும் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பங்குத்தொகை உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை 77.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022-ஆம் ஆண்டு பெறப்பட்டு திட்டப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. 

இந்த மெகா உணவுப் பூங்காவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி, சுற்றுச்சுவர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தீயணைப்பு வசதி, வங்கி, உணவகம், கருத்தரங்கக்கூடம், அலுவலகம், எடை மேடை போன்ற வசதிகளும், பொது உட்கட்டமைப்பு வசதிகளான 7500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் வசதி, பரிசோதனை ஆய்வகம், 20 கடைகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

 இந்த உணவுப்பூங்காவில் அமைக்கப்படும் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகள், சிப்காட் / சிட்கோ கொள்கையின்படி நிலம், தேவைக்கேற்ப தண்ணீர் வசதி, தடையில்லா மின்சாரம், தமிழ்நாடு உணவு பதப்படுத்தப்படும் கொள்கையின்படி முதலீட்டு மானியம், முதலீட்டு மூலதனத்திற்கு பெறப்பட்ட கடனில் 3 சதவிகித வட்டி விலக்கு, சந்தை கட்டணத்தில் விலக்கு, தரம்பிரித்தல், சிப்பம் கட்டுதல் மற்றும் பயிற்சிக்கான தொழில்நுட்ப உதவி, தரச்சான்றிதழ் பெறுதல் மற்றும் காப்புரிமை பதிவு செய்வதில் உதவி. போக்குவரத்து உதவி. ஏற்றுமதி ஊக்கத்தொகை, தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு. தர பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் ஒன்றிய அரசின்உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் 35 சதவிகித மானியம் போன்ற வசதிகளையும் பெறுவர். 

இந்த மெகா உணவுப் பூங்காவில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு 28 தொழில் மனைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 14 ஏக்கர் தொழில் மனைகள் திருநெல்வேலியைச் சேர்ந்த Syed Agro Industries Pvt. Ltd. Syed Home Industries Pvt. Ltd. - BonDia Food and Agro Products Pvt Ltd, பாளையங்கோட்டை-Kings Retail Ventures, திருநெல்வேலி - Guru Pickles, ஆகிய நிறுவனங்களுக்கு 94 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த மெகா உணவுப் பூங்கா மூலம் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த சுமார் 45,000 விவசாயிகளிடமிருந்து வேளாண் உற்பத்தி பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். சட்டத்துறை சார்பில், அரசு சட்டக் கல்லூரியில் 6 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம்; வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி திட்டப்பகுதியில் 85 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 768 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், அபிசேகப்பட்டி கால்நடை பண்ணையில் 8 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம். 

குஞ்சு பொறிப்பகக் கட்டடம். கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பன்முக மருத்துவமனை, பள்ளக்காலில் கால்நடை மருத்தகக் கட்டடம்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கங்கைகொண்டானில் 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையக் கட்டடம்: வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், மேலப்பாளையத்தில் 1 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம்: பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளமடை, புதுக்குடி, இட்டமொழி, முன்னீர்பள்ளம் மற்றும் மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3600 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: என மொத்தம், 1304 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவிலான 23 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப்பணிகளின் விவரங்கள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், சுத்தமல்லி முதல் கொங்கந்தான்பாறை வரை 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருநெல்வேலி நகருக்கு மேற்குப் புறவழிச்சாலை தொகுதி-1 திட்டப் பணிகள், தச்சநல்லூர் முதல் உடையார்பட்டி வரை உள்ள மேம்பாலம் அருகில் 4 கோடியே 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேவை சாலை மற்றும் வடிகால்கள் அமைக்கும் பணிகள்: 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 35 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்படவுள்ள ஆண்கள் விடுதி, வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் நிருவாகப் பிரிவுக் கட்டடங்கள்; பள்ளிக்கல்வித் துறை சார்பில், சேரன்மகாதேவி, மன்னார்கோவில், வெள்ளாங்குழி, மானூர் மற்றும் ரோஸ்மியாபுரம் ஆகிய அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 7 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறைகள்: 

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், திருநெல்வேலியில் 14 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம்: நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், மூலதனமானிய நிதி உதவி திட்டம், 15-வது நிதிக்குழு சுகாதார மானியம் மற்றும் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் 7 பேரூராட்சிகளில் 14 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வாரச் சந்தைகள், புதிய அலுவலகக் கட்டடங்கள்.

 வட்டார சுகாதார நிலையக் கட்டடம், சமுதாய நலக்கூடம் மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்: உயர்கல்வித் துறை சார்பில், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது மேலாண்மை தொகுதி மற்றும் கூடுதல் சிவில் பிரிவுக் கட்டடங்கள்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அம்பாசமுத்திரம், களக்காடு, மானூர். நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி. இராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 43 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டடங்கள், உயர்மட்டபாலம், தொடக்கப்பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் என மொத்தம், 309 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 8356 பயனாளிகளுக்கு கிராம பட்டாக்கள். ஆதிதிராவிடர். நரிக்குறவர். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இ-பட்டாக்கள். ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இலவச இணையவழி வீட்டுமனைப்பட்டாக்கள்.

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் மனை வாங்கிய நபர்களுக்கு 20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், மாநில வேளாண் மேம்பாட்டுத் திட்டம். தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், பொருளீட்டுக் கடன். தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மைத்திட்டம் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு. 

நுண்ணீர் பாசனத் திட்டம், மாநில தோட்டக்கலைவளர்ச்சித் திட்டம். பனை மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் 6807 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்பில் 91 பயனாளிகளுக்கு காணி பழங்குடியின மக்களுக்கான தனிநபர் வன உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள். இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். 

அனைத்து திருமண நிதி உதவி திட்டங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் திட்டம் போன்ற திட்டங்களில் 319 பயனாளிகளுக்கு உதவிகள்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், நலவாரிய உதவிகளான விபத்து.

 இயற்கை மரணம். கல்வி உதவித் தொகை போன்ற உதவிகளை 665 பயனாளிகளுக்கு வழங்குதல்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மகளிர் திட்டத்தின் மூலம் வங்கிக்கடன், சுழல்நிதி, சமுதாய முதலீட்டு நிதி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் நுண் நிறுவன நிதிக்கடன், இணை மானியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கலைஞரின் கனவு இல்லம், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் புனரமைத்தல் அல்லது புதிதாக கட்டிக் கொடுத்தல், ஊரக வீடுகள் பழுது பார்த்தல், இலங்கை தமிழர் மறுவாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்களில் 9108 பயனாளிகளுக்கு உதவிகள்: 

பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, தொழிலாளர் நலத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். 

இந்த விழாவில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன். மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன். 

மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு பால்வளத்தறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. ராபார்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மு.அப்துல் வகாப், திரு. ரூபி ஆர். மனோகரன்.திரு.நயினார் நாகேந்திரன். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு.கோ.ராமகிருஷ்ணன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன். 

இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப.. நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் திரு. ஆனந்த். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.