உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (24.02.2025) சென்னை. நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

ஆய்வுக்கூட்டத்தில். பதிவுத்துறையில் துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று ஆவணங்களை சரிபார்த்தல், களப்பணிகளை துரிதப்படுத்தி நிலுவையிலுள்ள ஆவணங்களை உரிய நபர்களுக்கு வழங்குதல், மற்றும் அனைத்து அலுவலக ஆவணங்களும் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, பணிகளை திறம்பட மேற்கொண்டு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தர ஒத்துழைக்குமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதிவுத்துறைக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ 274 கோடி மதிப்பீட்டில் 128 புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக நிதி வழங்கியுள்ளார் எனவும், அதில் 31 கட்டடங்கள் நாளது தேதி வரை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்து. மீதமுள்ள கட்டடப் பணிகளை அறிவுறுத்தினார்கள். விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.குமார் ஜயந்த், இ.ஆ.ப. பதிவுத்துறை தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.