ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எச்.டி.எப்.சி வங்கி இணைந்து நிதி கல்வியறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி - சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவியர்களுக்கு நற்ச்சான்றிதழ்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சென்னை கன்னிகாபுரம் அரசு ஆதிதிராவிடர் நலப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எச்.டி.எப்.சி வங்கி இணைந்து நிதி கல்வியறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் அவர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா ஆகியோர் தொடங்கி வைத்து சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவியர்களுக்கு நற்ச்சான்றிதழ் வழங்கினார்கள். 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக இன்று (17.02.2025) சென்னை கன்னிகாபுரம் அரசு ஆதிதிராவிடர் நலப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எச்.டி.எப்.சி வங்கி இணைந்து நிதி கல்வியறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் அவர்கள் மற்றும் பெருநகர சென்னைமாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா ஆகியோர் தொடங்கி வைத்து சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவியர்களுக்கு நற்ச்சான்றிதழ் வழங்கி விழாவில் பேருரையாற்றினார்கள். மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது. 

ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எச்.டி.எப்.சி வங்கி இணைந்து நிதி கல்வியறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிக்கும் வகையிலும், சமுக பொறுப்பு உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் அரசாங்க நிதி உதவி திட்டங்கள் பற்றி தகவலறிந்துக் கொள்ளவும். குடும்பத்திற்குத் தேவையான நிதி அறிவையும் தெரிந்துக்கொள்ளும் வகையில் மாணாக்கர்களுக்கு அடிப்படை வங்கி கருத்துக்கள், சேமிப்பின் முக்கிய தத்துவம் மற்றும் நிதி ஒழுக்கம் பற்றிய எளிமையாக ஈர்க்கக்கூடிய வகையிலும், பெற்றோர்களுக்கு சேமிப்பு உத்திகள். முதலீட்டுக்கான வழிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய அரசாங்க நிதி உதவி திட்டங்களை தெரிந்துக்கொள்ளும் வண்ணம் எச்.டி.எப்.சி வங்கியின் வல்லுனர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். 

நிதிக் கருத்துக்களை புரிந்துக் கொள்வதற்கும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுவதற்கு எளிமையாக அமையும் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், திரு.வி.க சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி க. லட்சுமி பிரியா. இ.ஆ.ப. ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் திரு. த.ஆனந்த், இ.ஆ.ப. எச்.டி.எப்.சி வங்கி சென்னை மண்டல அலுவலர் திரு. பாலாஜி கிருஷ்ணமாச்சாரியார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு சரவணன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.