சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் டியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி ஆற்றிய உரை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.2.2025) சென்னை, டிக்காஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி ஆற்றிய உரை. 
பயனாளி பெருமக்களே. தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வணக்கத்தை இன்றைக்கு வடசென்னை பகுதியில் இந்த சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் வடசென்னை எந்த அளவிற்கு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி நாம் இன்றைக்கு வடசென்னையை வளர்ச்சி சென்னையாக, எப்படி இன்றைக்கு மத்திய சென்னை, தென்சென்னை வளர்ந்து வந்திருக்கிறதோ, அதேபோல், இந்த வடசென்னைப் பகுதியையும் மாற்றிட வேண்டும். அதைவிட பெரிதாக உருவாக்கிட வேண்டும் என்பதற்காகதான் நம்முடைய அரசு இன்றைக்கு சிறப்பாக பல்வேறுத் திட்டங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 

முதலில் நான் வடசென்னை பகுதிக்காக சட்டமன்றத்தில் 1000 கோடி ஒதுக்கீடு செய்து ரூபாய் வடசென்னை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது என்று நான் அறிவித்தேன். இப்போது 1000 கோடி அல்ல, 6400 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகளையெல்லாம் நாம் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். அதேபோல், நகர்புற வாழ்விட மேலாண்மை வாரியத்தின் சார்பில், 5059 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 மாவட்டங்களில் 44,609 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு வடசென்னைப் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்க வேண்டும். இங்கே வரவேற்புரையாற்றிய நம்முடைய திரு. அன்பரசன் அவர்கள் பேசுகின்றபோது குறிப்பிட்டு சொன்னார். முதன் முதலில் குடிசை மாற்று வாரியம் திட்டம் என்பது கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது என்பதை எடுத்து சொன்னார். 

அப்படிப்பட்ட குடிசை மாற்று வாரியம் இன்றைக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரிலே வீடுகளை கட்டித்தருவது மட்டுமல்ல, பழுதடைந்த வீடுகளையெல்லாம் சீர்படுத்தி இன்றைக்கு அவர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணா காலத்தில் உருவாக்கப்பட்டு, ஆட்சிப் பொறுப்பேற்று, அதைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 5 முறை ஆட்சியில் இருந்தபோது அவர்கள் எல்லாம் செய்த சாதனைகள் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் பெரும்பாண்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றோம். வெற்றி செய்தி கிடைத்தவுடன் உடனடியாக நானும், கழக மூத்த தலைவர்களும். முன்னோடிகளும், கழக செயல்வீரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினோம். அதைத் தொடர்ந்து, தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தோம். அதன் பிறகு நான் பத்திரிகையாளர்களை சந்தித்தேன். அப்படி சந்தித்தபோது, பத்திரிகையாளர்களிடத்தில் சொன்ன செய்தி என்னவென்றால், இந்த ஆட்சி சிறப்பாக செயல்படவேண்டும். 

மக்கள் எந்த எதிர்பார்ப்போடு இந்த ஆட்சியை உருவாக்கி தந்திருக்கிறார்களோ, தேர்தல் நேரத்தில் அறிவித்த அறிவிப்புகளை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றுவோம். சொன்னதை செய்யக்கூடிய ஆட்சி. சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் எங்களுடைய ஆட்சியாக இருக்கும். அதுமட்டுமல்ல. மற்றொன்று முக்கியமான செய்தியை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். இந்த ஆட்சி என்பது வாக்களித்தவர்களுஇருக்கக்கூடிய மாணவிகள் வசதி இல்லாத காரணத்தினால் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதை உணர்ந்த காரணத்தினால்தான். 

நாம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்கின்றபோது மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைக்கு அது வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், இன்றைக்கு இந்த மாணவிகளெல்லாம் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான செய்தியை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த அளவிற்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல. மாணவிகளுக்கு மட்டும்தானா. எங்களைப்போன்ற மாணவர்களுக்கு இல்லையா? என்று மாணவர்கள் கேட்டார்கள். உங்களுக்கும் உண்டு என்று சொல்லி தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது காலை 8 மணிக்கு செல்லவேண்டும் என்று சொன்னால், அக்குழந்தைகளின் பெற்றோர்கள் கூலி வேலைக்கோ வேறு எந்த வேலைக்கோ செல்கின்ற சூழ்நிலையில், அவர்களால் சமைத்து, குழந்தைக்கு உணவைக் கொடுத்துவிட்டு பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதை உணர்ந்த இந்த ஆட்சி உடனடியாக அவர்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டுவந்தது. 

என்ன திட்டம் என்று சொன்னால், காலை உணவுத் திட்டம். மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் நீதிக் கட்சி ஆட்சியிலிருந்தபோது தியாகராயர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம். அந்த திட்டத்தை தான் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் ஆட்சியின் காலத்தில் அதை பரவலாக்கி எல்லோருக்கும் சேருகின்ற வகையில் அதை நிறைவேற்றி காட்டினார். அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் அவர்கள் சத்துணவாக வழங்க வேண்டும் என்று சொல்லி சத்துணவு திட்டம் என்ற பெயரில் எம்.ஜி.ஆர் அவர்கள் அதை தொடர்ந்து நிறைவேற்றினார். அதற்கு பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அது உண்மையான சத்துணவு என்று சொல்லி 5 நாட்கள் முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டத்தை நிறைவேற்றித் தந்தார். அதற்குப் பிறகு, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் அதையும் தாண்டி நம்முடைய வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றபோது நாம் உணவை கொடுக்காமல் அனுப்பிவைக்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய வகையில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன்க்கு மட்டுமல்ல. 

வாக்களிக்க மறந்தவர்களுக்கும். வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்து நடைபெறக்கூடிய ஆட்சி என்று சொன்னேன். அதையும் தாண்டி ஒன்று சொன்னேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் போய்விட்டோம் என்று வருந்தவேண்டும் என்ற நிலையில் என்னுடைய ஆட்சி இருக்கும் என்று நான் சொன்னேன். அது இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100-க்கு 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றிக்காட்டியிருக்கிறோம். இன்னும் மீதி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று நீங்கள் கேட்கலாம். இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அறிவித்த திட்டங்கள் பல. தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது அது என்ன என்று கேட்டால், உதாரணத்திற்கு ஒன்றினை நான் சொல்கிறேன். புதுமைப் பெண் என்கின்ற திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படவில்லை. 

புதுமைப் பெண் திட்டம் என்று சொன்னால் உங்களுக்குத் தெரியும். பள்ளி படிப்பை முடித்துவிட்டு ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து அவர்களுக்கு காலை உணவுத் திட்டம் என்ற பெயரிலே காலை உணவினை வழங்கிக்கொண்டிருக்கின்றோம். இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்வதற்கு காரணம். இதுஎல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை. இல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கும் ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் சார்பில்தான் இன்றைக்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு வீடுகளை உருவாக்கித்தந்து அதற்கு தேவையான சலுகைகளை, நீங்கள் எந்த அளவிற்கு சலுகைகளை எதிர்பார்த்தீர்களோ, அதைவிட அதிகமான சலுகைகளை இந்த அரசு உங்களுக்கு வழங்கி இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதை நீங்கள் நல்லவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு அப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஆட்சியை இன்றைக்கு உங்களுக்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டு. 

உங்களுடைய மகிழ்ச்சி கலந்த மலர்ந்து இருக்கக்கூடிய உங்கள் முகங்களையெல்லாம் பார்க்கின்றபோது இந்த ஆட்சியின் மீது எப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக்கொண்டிக்கிறது என்பதை இந்த நேரத்தில் சொல்லி இந்த இனிய வாய்ப்பு தந்த அத்தனை பேருக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டிருக்கும் நம்முடைய அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களுக்கும், அதற்கு துணைநின்ற துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய திரு. அன்பரசன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, எல்லாவற்றிற்கும் துணையாக இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.