வலந்தீனா தெரெசுக்கோவா
திருக்குறள்:
பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை குறள்எண்:983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்
வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பொருள்:
அன்புடைமை. நாணம், பொதுநலம், இரக்கம், வாய்மை ஐந்தும் குனநிறைவு என்ற கட்டடத்தின்
தூண்களாகும்.
பழமொழி :
செயல்கள் தேவை; சொற்களல்ல. Wanted deeds only, not words.
இரண்டொழுக்க பண்புகள் :
பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு
நடப்பேன். *
பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின்
அறிவுரையை கேட்டு நடப்பேன் .
பொன்மொழி :
எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல, எவரும் எவருக்கும் மேலானவனும் அல்ல,
மனிதர்கள் அனைவரும் சமம்.---தந்தை பெரியார்
பொது அறிவு :
1. உலகின் முதல் கணினி வைரஸை உருவாக்கிய நாடு எது? விடை: பாகிஸ்தான். 2.
இந்தியாவின் இளைய பிரதமர் யார்? விடை: ராஜீவ் காந்தி
English words & meanings :
Railway station. - தொடர்வண்டி நிலையம் Zoo. - விலங்குகள் பூங்கா
வேளாண்மையும் வாழ்வும் :
விவசாய உற்பத்தியில் அதிகப்படியான நீர், கனமழை முதல் அதிகப்படியான நீர்ப்பாசனம்
வரை, பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கும், அத்துடன்
கட்டிடங்கள்/கட்டமைப்புகளை சேதப்படுத்தும்.
மார்ச் 06 வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்
வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற
விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர்
வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று
நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.
1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து
விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு
அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது.
இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக
நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப்
பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார். சூன் 19ஆம் நாள்
விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில்
இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற
பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.
நீதிக்கதை நாளைய உணவு
சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து
கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து
மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி
நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை,
நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து
வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது. அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ
உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும்
அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்றது
காட்டமாய்.இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என
நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது
வெள்ளாடு. சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட
காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால்,
வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள்
காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து
வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின.
ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன. ‘அடுத்தவர் பேச்சைக்
கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது
திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு
இடம் தேடிச் சென்றன. ‘இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை
வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை செம்மறி
ஆடுகள் உணர்ந்து கொண்டன.
இன்றைய செய்திகள் 06.03.2025
வரும் கோடைக்காலத்தில்
தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு
பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு
தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. *
இந்தியாவிலிருந்து விசா வேண்டி
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத்
தொட்டுள்ளது.
இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு
அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு
வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில்
அறிவித்தார்.
ICC சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டியில்
இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.
Today's Headlines
India's daily electricity demand is expected to increase to 22,000 megawatts
this summer, a 10% rise from last year.¹
The Tamil Nadu government has
allocated ₹265 crores as a short-term loan to transport corporations to provide
pension benefits to retired transport employees.
India has seen a significant
surge in visa applications, with over 67.5 lakh applications received in 2024
alone.
The United States has announced plans to impose reciprocal tax rates on
several countries, including India, China, Brazil, Mexico, and Canada, starting
from April 2
ICC Champions Trophy: New Zealand, defeated South Africa by 50
runs, will play with India in the final.