பால் :பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை குறள் எண்:985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல்;
அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. பொருள்: காரியம் முடிப்போரது திறமை பணிந்து
போதல்; அதுவே பகைவரை நண்பராக்குங் கருவி.
பழமொழி :
செய்யுள் அழகு மனதைக் கொள்ளை கொள்ளுதல். The charm of the poetry captivates the
soul.
இரண்டொழுக்க பண்புகள் :
பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன்.
பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன். பொன்மொழி : ஒரு முள்
குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.
பொது அறிவு :
1. கங்கை நதி தேசிய நதியாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? விடை : 2008 ஆம் ஆண்டு.
2.
மழை நீரை மட்டும் குடிக்கும் பறவை எது? விடை : சடக் பறவை
English words & meanings :
Artist. - ஓவியர் Assistant. - உதவியாளர் வேளாண்மையும் வாழ்வும் : புவியின் நீரில்
சுமார் 3% மட்டுமே நன்னீர், இதில் சுமார் 1.2% மட்டுமே குடிக்கக்கூடியது
(மீதமுள்ளவை பனிப்பாறைகள், பனிக்கட்டிகள், நிரந்தர உறைபனி அல்லது ஆழமான
நிலத்தடியில் பிணைக்கப்பட்டுள்ளன)
மார்ச் 10 சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897)
ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண்
ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன்
(Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண்
உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல்
பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.
சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி
3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது. ஜோதிராவ்
புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற
பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி
புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில்
சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின்
அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும்
மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்
மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி
செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார்.
பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.
நீதிக்கதை உதவியும் ஒத்துழைப்பும்
ஒரு நாள், வாயில் உள்ள பற்கள் அனைத்தும் ஒன்று கூடி, நாம் எல்லோரும் கடப்பட்டு
பொருள்களை சிரமத்தோடு கடித்து, மெல்லுகிறோம். ஆனால், இந்த நாக்குக்கு ஒரு உழைப்பும்
இல்லை, சுவைத்து, உண்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும், நாம்
பெரும்பான்மையானவர்கள். நாக்கோ சிறுபான்மை. அதனால் நாம் நம்முடைய வலிமையைக்
காட்டுவதற்காக, நாக்கைக் கடித்து புண் ஆக்கிவிடுவோம், அது என்ன செய்யும்
பார்க்கலாம் என்ற தீர்மானித்தன. அதை அறிந்த நாக்கு, “அடே பற்களே! நாம் அனைவரும்
மனித உடலில் உள்ள உறுப்புகள். ஒன்றுக்கொன்று உதவியுடனும், ஒத்துழைப்புடனும்
இருந்து, செயல்படுவதே முறை. இதில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற
பேச்சுக்கே இடமில்லை. அவரவர் கடமையை அவரவர் செய்வதே சிறப்பு. மீறி தகராறு
செய்வீர்களானால், நான் என்ன செய்வேன் தெரியுமா? தெருவில் போய்க் கொண்டிருக்கும் ஒரு
முரட்டு ஆளைப் பார்த்து, ‘அடே, முரடனே படவா!’ என்று சொல்லி விட்டு, நான் உள்ளே போய்
விடுவேன்”. அவன் வேகமாக வந்து, முகத்தில் பல குத்துகள் விடுவான். நீங்கள் எல்லோரும்
ஆளுக்கு ஒருபக்கமாக, உதிர்ந்து போய்விடுவீர்கள்” என்று எச்சரித்தது நாக்கு. நாக்கு
கூறியது உண்மைதான்! என்பதை பற்கள் உணர்ந்தன. நீதி:ஒருவருக்கு அடுத்தவர் உதவியும்
ஒத்துழைப்பும் இல்லாமல் வாழமுடியாது.
இன்றைய செய்திகள் 10.03.2025
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள தமிழகத்தில் 22 இடங்களில்
26,000 பெண் போலீஸாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
9
நகரங்களில் ரூ.72 கோடி செலவில் தோழி விடுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் இந்தியா 2-ம்
இடத்தைப் பிடித்துள்ளது.
‘‘அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதித்ததை
எடுத்துக் கூறியதால், வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது’’ என அமெரிக்க
அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்
டிராபி கோப்பையை வென்றது இந்தியா..நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில்
நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
26,000 female policemen have to be given skills development training in 22
places in Tamil Nadu to handle crimes against women and children.
CM Stalin's
announced to build "Thozhi Viduthikal" in 9 cities at a cost of Rs 72 crore.
India is ranked No. 2 in women-led start-up companies.
US President Trump has
boasted that India has agreed to reduce taxes as India has taken too much tax on
US goods.
India won the Champion Trophy Cup after 12 years.India beat New
Zealand by 4 wickets in hectic final.