பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.03.2025
திருக்குறள்:
பால்: பொருட்பால். இயல்: குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண்:992 அன்புஉடைமை
ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புஉடைமை என்னும் வழக்கு.
பொருள்:
யாரிடத்தும் அன்புடனிருத்தலும், பிறந்த உயர்குடிக்கேற்ப வாழ்தலும் இரண்டும் பண்பான
நெறிகளாம்.
பழமொழி :
தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும். Delay is dangerous.
இரண்டொழுக்க பண்புகள் :
1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன். 2.கடைகளில்
விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை
சாறு குடிப்பேன்.
பொன்மொழி :
தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார். ---பிடல் காஸ்ட்ரோ
பொது அறிவு :
1. ஒரு துளி ரத்தத்தின் எடை எவ்வளவு? விடை: 0.05 மில்லிகிராம். 2. மனித உடலின்
குளிர்ச்சியான பகுதி எது? விடை : மூக்கு
English words & meanings :
Pilot. - விமானி Politician. - அரசியல்வாதி வேளாண்மையும் வாழ்வும் : நீர் சேமிப்பு
முறை என்பது ஏதோ மரம் நடு விழா என்பது போல் வருடத்திற்கு ஒரு சிலநாட்கள் செய்ய
வேண்டிய செயல் அல்ல. இன்றைய பெருகிவரும் மக்கள்தொகையில் நீர் சேமிப்பு முறைகளை
ஒவ்வொரு வினாடியும் கடைப்பிடிக்க வேண்டிய அவசரத்தில் அனைவரும் உள்ளோம்.
நீதிக்கதை சிங்கமும் சிலையும்
ராமுவும், சிங்கமும் நண்பர்கள். ஒரு நாள் ராமு தன்னுடன் சிங்கத்தை அழைத்துக்கொண்டு
காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில்
தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு
சென்றனர். அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது
நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது. ''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம்
இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு. ''ஓ, அது மனிதன் செய்த சிலை.
ஒரு சிங்கம் அந்த சிலையை செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான்
நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம். நீதி: தனக்கென்றால் தனி
வழக்குதான்.
இன்றைய செய்திகள் 19.03.2025
Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' -
முதல்வர் ஸ்டாலின்
உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான
நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் 9 மாதங்களுக்குப் பிறகு
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மே 19 திரும்ப உள்ளனர்.
சந்திரயான் 5
திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன்
தெரிவித்துள்ளார். மேலும் சந்திரயான் 5 மிஷனை ஜப்பானின் ஜாக்ஸாவுடன் இணைந்து இஸ்ரோ
செயல்படுத்த உள்ளதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 தொடர் வரும்
சனிக்கிழமை (மார்ச் 22) அன்று கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது. வரும் மே 25ஆம்
தேதி வரை நடைபெறும்.
Today's Headlines
Trek tamilnadu: `Rs 63.43 lakh in 3 months; Meaningful Travel ' - CM Stalin
The summer festival for the current year in Nilgiris, which is attracted to
tourists globally, is underway.
Sunita Williams and Patch Wilmore 9 months
later from the International Space Station to Earth They are returning May 19.
ISRO leader Narayanan has said that the central government has given permission
to implement the Chandrayaan 5 project. Narayanan also said that ISRO will be
implementing Chandrayaan 5 mission with Japan's Jacksa.
The IPL 2025 series is
set to begin on Saturday (March 22) in Kolkata. It will be held until May 25.
Covai women ICT_போதிமரம்