பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 27/03/2025

யூரி அலெக்சியேவிச் ககாரின் 

திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண்: 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். பொருள்: எவருடனும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும் இருளாகும். 

பழமொழி : The swine do not know what heaven is கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை 

இரண்டொழுக்க பண்புகள்

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன். 

பொன்மொழி : சதுரங்க விளையாட்டில் முன்யோசனை வெல்லுவதைப் போல ,வாழ்க்கையிலும் முன்யோசனை வெல்லுகிறது ! ---ஸெஸில் 

பொது அறிவு : 
1. எந்த தேசத்தில் அதிக அளவு ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.? விடை: ஜாம்பியா. 80% சதவீத பூக்கள் 
2. ஒவ்வொரு வினாடிக்கும் எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின?. விடை : 205 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அனுப்பப்படுகிறது. 
English words & meanings : 
Exercise - உடற்பயிற்சி Face mask - முகக்கவசம் 

வேளாண்மையும் வாழ்வும் : 

உங்களின் நீர் உபயோகங்களை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எங்கு, எப்படி தண்ணீர் வீணாகிறது எனக் கண்டறிந்து அதைத் தடுக்க முடியும். 

மார்ச் 27 உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார். 

யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள் யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார். 

நீதிக்கதை ஆறும்‌ நீரும்‌ 

நல்ல வெயில்‌ காலம்‌. வழிப்போக்கர்‌ இருவர்‌ சாலை வழியாகச்‌ சென்று கொண்டிருந்தார்கள்‌- நடைக்‌ களைப்பும்‌ வெயில்‌ கொதிப்பும்‌ அவர்‌ களுக்குத்‌ தண்ணீர்த்‌ தவிப்பை உண்டு பண்ணின. சுற்றிலும்‌ ஒரே பொட்டல்‌. அருகில்‌ வீடு வாசல்‌ தோப்புத்‌ துரவு ஒன்றும்‌ கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல்‌ திகைத்தார்கள்‌. திடீரென்று அவர்களில்‌ ஒருவர்‌ மகிழ்ச்சியோடு பேசினார்‌ “அண்ணா, இப்போதுதான்‌ நினைப்பு வருகிறது. வலதுகைப்‌ புறமாக கூப்பிடு தூரம் சென்றால்‌ அங்கே ஓர்‌ ஆறு இருக்கிறது. அங்கே சென்று தண்ணீர்‌ குடித்துக்‌ களைப்பாறியபின்‌ திரும்பலாம்‌”? என்று அவர்‌ கூறிய செய்தி இன்பம்‌ தந்தது. இருவரும்‌ சிறிது தூரம்‌ வலது புறமாகத்‌ நடந்தபின்‌,ஆற்று மணல்‌ பரந்து கிடப்பதைக்‌ கண்டார்கள்‌. ஆற்றைக்‌ கண்டுவிட்ட குதூகலத்துடன்‌ கொதிக்கும்‌ மணற்சூட்டையும்‌ பொருட்படுத்தாமல்‌ விரைந்து நடந்தார்கள்‌. ஆனால்‌ என்ன ஏமாற்றம்‌ ! அந்த ஆறு வற்றி வறண்டுபோய்க்‌ கிடந்தது. இக்கரையிலிருந்து அக்‌ கரைவரை எங்கும்‌ ஒரே மணல்வெளிதான்‌ கண்‌ணுக்குத்‌ தெரிந்தது. தூரத்தில்‌ கானல்தான்‌ தோன்றியது. இருவரும்‌ மனமுடைந்து போனார்கள்‌. சிறிதுநேரத்தில்‌ தண்ணீர்‌ கிடைக்காவிட்டால்‌ மயங்கிச்‌சோர்ந்து விழ வேண்டியதுதான்,அவர்கள்‌ நம்பிக்கை இழந்து நின்றபோது ஆடு மேய்க்கும்‌ பையன்‌ ஒருவன்‌ அங்கே வந்தான்‌” ஆற்று மணலைத்‌ தோண்டினான்‌ இரண்டடி ஆழம்‌ தோண்டிய பின்‌ அடியிலிருந்து தண்ணீர்‌ ஊறி வந்தது. இரு கைகளாலும்‌ அள்ளிக்‌ குடித்து சென்றான்‌. அதைப்‌ பார்த்த வழிப்போக்கர்கள் தாங்கள்‌ நின்ற இடத்திலேயே மணலைத்‌ தோண்டினார்கள்‌. அங்கேயும்‌ அடியில்‌ நீர்‌ ஊறியது, அவர்கள்‌ தூய்மையான அந்த நீரைப்‌ பருகித்‌ போற்றிப்‌ புகழ்ந்து சென்‌றார்கள்‌, 

நீதி : ஆற்றைப் போல் நல்ல குடியில் பிறந்த பெரியோர்கள், தாங்கள் துன்பமடைந்த காலத்தும் தங்களை நாடி வந்தோருக்கு நன்மையே செய்வார்கள். 

இன்றைய செய்திகள் 27.03.2025 

அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

 கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு. 

டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. 
வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 
மியாமி ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம். 

Today's Headlines 

Minister Rajagannappan said in the legislative session that there is a great demand for Aavin ghee in the United States. 
Rural Development Minister E. Periyasamy has announced that community health complexes will be built in rural areas at an estimated cost of Rs 3150 crore. 
It was reported in the Lok Sabha that 83,668 whatsup numbers and 3,962 Skype accounts have been crippled in connection with digital arrests. 
The US has announced that 25 per cent additional tax will be imposed on countries that import oil and gas from Venezuela. 
Miami Open tennis: Improvement of American player Taylor Britz quarterfinals.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.