9,970 ரயில் ஓட்டுநர்களை தேர்வு செய்கிறது ரயில்வே

ரயில்வேயில் நாடு முழுதும், 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில், 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல் கட்டமாக, ரயில் ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு பிரிவு பணியிடங்களை நிரப்ப, ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு முழுதும் 9,970 உதவி ஓட்டுநர் பயணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை, ரயில்வே கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில், 1,461, தெற்கு மத்திய ரயில்வேயில், 989, மேற்கு ரயில்வேயில், 885, தெற்கு கிழக்கு ரயில்வேயில், 796, கிழக்கு ரயில்வேயில்,768 உதவி ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதில், தெற்கு ரயில்வேயில், 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ., டிப்ளமா, பி.இ., - பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமா, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல், 10 முதல் விண்ணப்பிக்கலாம். மே 9ம் தேதி கடைசி நாள். அனைத்து ஆர்.ஆர்.பி., இணையதளங்களிலும், இதற்கான முழு தகவலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.