ஜாக்டோ-ஜியோவின் 10 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு செய்திட வேண்டுகோள்

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 08.04.2025 அன்று தோழர் S. ஞானசேகரன், தோழர் சு. குணசேகரன், தோழர் M.P. முருகையன் ஆகியோர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில ஒருங்கிணைப்பாளர்களும் விவாதத்தில் பங்கேற்று கீழ்க்கண்ட முடிவுகளை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தலைமைக்குழு சார்பாக வெளியிடப்படும் ஊடகச் செய்தி

ஜாக்டோ-ஜியோ தனது நியாயமான 10 அம்சக் கோரிக்கைகளைவலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களது போராட்டக் களத்திற்கு வந்து எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கை அளித்ததோடு தேர்தல் வாக்குறுதியிலும் அச்சடித்து உறுதிப்படுத்தினார். இலட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் தேர்தல் களத்தில் முழு ஆதரவளித்தனர். முதல்வர் ஆன பின்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டிலும், 2022 ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டிலும் கலந்து கொண்டு இந்த ஆட்சி உங்களால் அமையப்பெற்றது. உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நான் மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை என மீண்டும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

ஆகவே கொரோனா காலகட்டத்திலும் சென்னை தூத்துக்குடி பெரு வெள்ளத்திலும் இந்த ஆட்சியோடு கரம்கோர்த்து அரசு ஊழியர், ஆ ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் பலபேர் தனது இன்னுயிரை இழந்து மேற்கண்ட இடர்பாடுகளிலிருந்து மீள முழு ஆதரவளித்தனர். ஆகவே எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எப்பொழுதெல்லாம் போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல் படுத்தினாரே தவிர நான்காண்டுகள் கழிந்த பின்பும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

எனவே கடந்த 27.01.2025 அன்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூடி நான்கு கட்ட போராட்டம் திட்டமிட்டோம். அதன் ஒரு பகுதியாக 25.02.2025 மறியல் போராட்டத்தை நோக்கியிருந்த சூழலில் 24.02.2025 அன்று மாண்புமிகு நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு ஜாக்டோ-ஜியோவை பேச்சவார்த்தைக்கு அழைத்து நான்கு வார கால அவகாசம் தெரிவித்து அதற்குள் கோரிக்கைகள் குறித்து முடிவெடுப்பதாக நம்பிக்கை அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் 25.02.2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டமாக தமிழகம் முழுவதும் நான்கு லட்சத்திற்குமேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்கள் எழுச்சிகரமாக பங்கேற்றனர்.


கோரிக்கைகள்

1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

காலவரையின்ற முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தைைமயாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

தொடக்கக் கல்வித்துறையில் பணி புரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.243, நாள்.21.02.2023ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS), பேராசிரியர் பணி மேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த் உயர்த்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியார்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். 13.03.2025 மீண்டும் ஜாக்டோ-ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் குறித்து உதாரணமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்பை மீண்டும் அமல்படுத்துவது, தொகுப்பூதிய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரைமுறைப்படுத்துவது, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார்.

ஆகவே நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது. ஆகவே 14.03.2025 நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் உணர்வு மட்டத்தை அறிந்து 23.03.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடவடிக்கைக்கு செல்வதென முடிவாற்றப்பட்டது. அப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். அரசுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேலாக எழுச்சிகரமாக பங்கேற்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

அதனடிப்படையில் இன்று (08.04.2025) நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

முடிவுகள்

1. 22.04.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கைப் பேரணி நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2. 24.05.2025 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை மாநாடு நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு இயக்க நடவடிக்கைகளிலும் மாவட்டங்களில் அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களை வலுவாக திரட்டி நடத்திட மாவட்ட அளவில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து பிரச்சார இயக்கம் நடத்திடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ-ஜியோவின் நியாயமான வாழ்வாதார 10 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டுமென அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25சதவீதமாக வழங்க வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்-அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப் பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2002 முதல் 2005 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்

சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.