தொடக்கக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்களை சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 100 நாட்களில் 100% வாசித்தல் மற்றும் கணித அடிப்படைத் திறனில் தயார்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்தல் என்ற இலக்கினை அடையும் பொருட்டு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் 1 முதல் 3 முடிய உள்ள மாணவர்களை 04.04.2025 அன்று மற்றும் 4 மற்றும் 5 முடிய உள்ள மாணவர்களை 16.04.2025 அன்றும் திறனறியும் செய்ய பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே. மேற்காணும் தினங்களில் வட்டாரவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் மதிப்பீடு செய்ய உரிய அறிவுரைகள் வழங்குமாறும். இப்பணியினை செவ்வனே மேற்கொள்ள அறிவுறுத்துமாறும் அனைத்து மாவட்டத் திட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தொடக்கக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - தேர்வு செய்யப்பட்டுள்ள 4552 பள்ளிகளில் 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் சோதித்து அறிதல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.