14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?
தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை
விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் அன்பில்
மகேஸ் பொய்யொமொழி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் வெள்ளிக்
கிழமை நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில்
அளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி பேசியதாவது:
நீதிபதி சந்துரு
அறிக்கையின் பரிந்துரைபடி ஜாதி பெயரில் பள்ளிகள் செயல்படுவது குறித்து உரிய முடிவு
எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் போக்ஸோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்
தப்படுகிறது. பள்ளி புத்தகங்க ளில் குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் 14417 ஆகிய
எண்கள் இடம்பெற்றுள்ளன.
கடினமான பாடங்களை மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில்
உருவாக்கப்பட்ட 'மணற்கேணி செயலி மூலம் 8.96 அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
விளக்கம் லட்சம் பேர் பயனடை கின்றனர். கடந்த 4 ஆண் டுகளில் 10-ஆம் வகுப் புக்கு 410
தேர்வு மையங் களும், பிளஸ் 2 வகுப் புக்கு 415 தேர்வு மையங் களும் புதிதாகக் கொண்
டுவரப்பட்டுள்ளன. பள் ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் விரைவில் நிய மிக்கப்படுவர்.
கல்வி தொலைக்காட்சி மூலம் சுமார் 1.23 கோடி மாணவர்கள் பயன டைந்து வருகின்றனர்.
தனியார் பள்ளி:
தனியார் பள் ளிகளில் கட்டணத்தை வரைமு றைப்படுத்த முன்னாள் நீதிபதி
பாலசுப்பிரமணியன் தலைமை யிலான குழு அமைக்கப்பட்டுள் ளது. இந்தக் குழு நிர்ணயத்ததை
விட அதிகமாககட்டணம்வசூலிக் கக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ளது போல் 'மாணவர்
சட்டப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு 2.30
லட்சம் மடிக்கணி னிகள் வழங்கப்பட்டன. மடிக்கணினி என்ற கருவி சார்ந்து அல்லாமல்
மாணவர் சுளுக்கு கல்வியறிவு சென்றடைய வேண் டும் எனும் நோக்கில் 8,209 அதிநவீன ஆய்
வுகூடங்கள் (லேப்) ரூ. $19கோடியில் கொண்டுவரப்பட் டுள்ளன. மேலும், 22,931 பள்ளிக
ளில் ரூ.415 கோடியில் ஸ்மார்ட் போர்டுகள் கொண்டுவரப்பட் டுள்ளன. இத்தகைய நவீன வச
திகள் மூலம் சுமார் 45 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வரு கின்றனர்.
கரோனாவுக்கு
பின்..
2019-20 காலக்கட்டத்தில் சுமார் 68 லட்சம்மாணவர்கள் அரசுபள்ளி ளில் பயின்று
வந்தனர். தற்போது 69.57 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கரோனா
காலக்கட்டத்தில் பொதுமக்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டபோது, அனைவரும் அரசு
பள்ளிகளில் சேர்ந்தனர். அதன் பின், அவர்களின் வாழ்வாதாரம் சீரான பின்பு மீண்டும்
தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
கரோனா காலக்கட்டத்தில் இணையவழி கல்வி தொடங்கிய
பின்பு மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்துவது அதிகமானது. கிட்டத்தட்ட 54 சதவீதமாணவர்
கள் கைப்பேசியில் மூழ்கியுள்ள தாக சில ஆய்வுகள் தெரிவிக்கின் றன. குறிப்பாக 9-ஆம்
வகுப்பு படிக்கும் மாணவரிடம் இருந்து இந்த பழக்கம் ஆரம்பிக்கிறது. ஆஸ்திரேலியா
போன்ற நாடுக ளில் 14 வயதுக்குப்பட்ட மாண வர்கள் சமூக ஊடகம் பயன்ப டுத்துவது தடை
செய்யப்பட்டுள் ளது.
இவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த
முடிவுகள் தேவை. அத னால் ஒரு மாநிலம் சார்ந்து அல் லாமல் ஒரு நாடு சார்ந்து எடுக்க
வேண்டிய முடிவாகும். 2015-16 ஆண்டுகளில் 1-ஆம் வகுப்பில் கண்டிப்பாக தமிழ்ப் பாடம்
இருக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற் போது 10-ஆம் வகுப்பு வரை தமிழ்
பாடத்தைத் தவிர்த்துவிட்டு,யாரும் படிக்க முடியாது என்ற அளவுக்கு
கொண்டுவரப்பட்டுள்ளது.
நான் முதல்வன்:
நான்மு தல்வன் திட்டத்தின் மூலம் மத் திய
அரசு பணிகள் மற்றும் உயர் கல்வியில் தமிழக மாணவர்கள் சாதித்து வருகின்றனர். பொது
நூலகங்களைப் பயன்படுத்தி 1.293 பேர் டிஎன்பிஎஸ்சி தேர் வில் வெற்றி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ உள்ளிட்ட தனி யார் பள்ளிகளைச் சேர்ந்த 3,565 தமிழ் ஆசிரியர்களுக்கு ஆண்
டுதோறும் பயிற்சி அளிக்கப்ப டும். 15 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி கற்கும் வகையில்
ரூ.39.2 கோடி முதலீடு செய்யப்பட்டு, இதுவரை 20 லட்சம் பேருக்கு எழுதப் படிக்க
சொல்லி கொடுக் கப்பட்டுள்ளது என்றார் அவர்.