தணிக்கை தடை சார்பான கூட்டம் - 16.04.2025 & 17.04.2025ல் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வித் துறையின் செயல்முறைகள்

தணிக்கை தடை சார்பான கூட்டம் - 16.04.2025 & 17.04.2025ல் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வித் துறையின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வித் துறையில் ஏப்ரல் 2025-ல் மாவட்டம் வாரியாக தணிக்கை பிரிவு கண்காணிப்பாளர்கள் பள்ளிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தடை சார்பான விவரங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை சார்பான தடைகளை மட்டும் நீக்கம் செய்து ஆணை வழங்க உரிய விவரங்களை சரிபார்த்து தொகுத்து நிதி ஆலோசகரிடம் ஒப்படைக்க பார்வை 1-ல் காணும் செயல்முறைகளின்படி தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் இணையமர்வு கூட்டம் நடைப்பெற்றது. தற்போது நடைபெற உள்ள இணையமர்வு கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிலுவையில் உள்ள அகத்தணிக்கை தடைகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய வட்டித் தொகை /ஆங்கில வழி கட்டணம் / கணினி கட்டணத் தொகைகள் சலான் மூலம் செலுத்தியுள்ள விவரங்கள் மற்றும் பணப்பலன் சாராத தணிக்கை தடை விவரங்களை மட்டும் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளிவாரியாக பெற்று தொகுத்து தயார் நிலையில் 10.04.2025-க்குள் வைத்திருக்குமாறும் மற்றும் மாவட்டத்தில் 2025 ஏப்ரல் - 16,17 ஆகிய தேதிகளில் முதன்மைக் கல்வி அலுவலக தலைமையிடத்தில் நடைபெற உள்ள இணையமர்வு கூட்டத்தில் தணிக்கை தடை நீக்கம் செய்வதற்கான பள்ளிகள் திட்டமிடப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த மாதம் ஒரு சில மாவட்டங்களில் நடைபெற்ற இணையமர்வு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம் / மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இருந்து ஒத்துழைப்பு என்பது தேவையான அளவிற்கு இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் இணையமர்வு கூட்ட தணிக்கை தடை நீக்க அறிக்கைகளை தயார் செய்வதில் மிகுந்த சிரமம் மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே தற்போது 2025 ஏப்ரல் -ல் நடைபெறவுள்ள இணையமர்வு கூட்டங்களில் பள்ளிக்கல்வி இயக்கக தணிக்கைப் பிரிவு கண்காணிப்பாளர்களுக்கு உரிய போதுமான இடவசதியுடன் கணினி தட்டச்சர், உதவியாளர் ஆகியோரை உடன் பணியமர்த்தி உடனுக்குடன் தடை நீக்க அறிக்கைகளை வழங்க ஏதுவாக ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் “சலான் தொகை செலுத்தியது சார்பாக பணம் செலுத்தியுள்ள பள்ளியின் பெயர் முழுமையாக செலுத்து சீட்டு (Challan)-ல் இடம் பெற்றுள்ள விவரம், “பேமெண்ட் சக்சஸ்" (Payment Success) ஆக செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரம், எந்த காரணத்திற்காக எந்த காலத்திற்கான தொகை சலான் மூலம் செலுத்தப்பட்டள்ளது என்ற விவரங்கள் முழுமையாக சலானில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து" அதன் பிறகு தொகுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இக்கடிதம் பெற்றுக் கொண்டமைக்கு உடன் ஒப்புதல் அளிக்க தெரிவிக்கலாகிறது. மேலும் நிவர்த்தி செய்ய கோரும் தணிக்கை தடை சார்பாக தணிக்கை தடை எழுப்பப்பட்ட தணிக்கை அறிக்கையின் நகல் கட்டாயம் படிவத்துடன் இணைக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு மற்றும் இதர பணப்பலன் சார்ந்த தணிக்கை தடை சார்பான கூட்டம் ஜூன் 2025 மற்றும் ஜூலை 2025 ஆகிய மாதங்களில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தனி தனியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.