பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22/04/2025


திருக்குறள்: பால்: பொருட்பால் இயல் :குடியியல் அதிகாரம்: உழவு குறள் எண்:1034. பலகுடை நீழலும் தம்கடைக்கீழ்க் காண்பர் அலகுஉடை நீழ லவர். பொருள்: நெற்ச்செல்வமுடைய உழவர், உலக அரசர்களின் கீழுள்ள நிலம் முழுவதையும், தம் அரசர் கீழாகச் செய்வர். 

பழமொழி : அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல- It is not wise to talk more. 

இரண்டொழுக்க பண்புகள் : *வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். * பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம், குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன். 

பொன்மொழி : எதை செய்ய வேண்டுமோ, அதை முழு கவனாத்துடன் செய்தால், எதை அடைய நினைக்கிறீர்களோ,அதை நிச்சயமாக அடையலாம். பொது அறிவு : 

 1. ஒரு தேனீக்கு எத்தனை கண்கள் உள்ளன? விடை: ஐந்து கண்கள். 2. எந்த விலங்கு இளஞ்சிவப்பு வியர்வையை விடுகிறது? விடை: நீர்யானை 

English words & meanings : Gift. - பரிசு Groom. - மணமகன் வேளாண்மையும் வாழ்வும் : நிலத்தடி நீர் மாசுபடுவதால் கிடைக்கும் நன்னீர் நிரம்புவதும் குறைகிறது எனவே நிலத்தடி நீர் வளங்களை மாசுபடாமல் பாதுகாப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நீர்பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும். 

ஏப்ரல் 22 புவி நாள் புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது. அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

நீதிக்கதை வைத்திய செலவு ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில்உள்ள வட்டிகடைக்காரரைஅணுகினான். அதற்கு அவர்“பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் அவரும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான். பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் வட்டிகடைக்காரர் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான். தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையைவிற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாயவட்டி வாங்குபவருக்குபாடம் கற்பிக்க விரும்பினான். “சரி குதிரையை விற்று முழு பணத்தையும் உனக்கே தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்துஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து“உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான் அதற்கு தெனாலிராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான்இக்குதிரையைக் கொடுப்பேன்” என்றான். தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் வட்டிகடைக்காரருக்கு ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை அவர் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான். அதற்கு தெனாலிராமன் “ஐயா குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியேகுதிரையை 1 பவுனுக்கு விற்றது. அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே. இது என்ன நியாயம்” என்றான். அவரோ 500 பவுன் வேண்டுமென்றான் இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வழக்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்ததுசரியே என்று தீர்ப்புக் கூறினார். 

 இன்றைய செய்திகள் 22.04.2025 

கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது முறையாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

நகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நான்கு நாள் பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

.கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். 

பெல்ஜியமில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. 

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே. 

Today's Headlines

Solar Power Production: In the year 2024-25, Tamil Nadu has maintained its 4th position at the All India level for the third consecutive time by generating 10,153.48 MW of solar power. 

Metropolitan Transport Corporation Employees: It has been announced that biometric attendance registration is mandatory for Metropolitan Transport Corporation employees starting today. 

US Vice President's Visit: US Vice President J.D. Vance has arrived in India with his family for a four-day trip. 

Pope Francis: The head of the Catholic Christian religion, Pope Francis, has passed away. 

Ajith Kumar's Car Race: Actor Ajith Kumar's team has secured the 2nd position in the car race held in Belgium, achieving a remarkable feat. 

Barcelona Open Tennis: Denmark's Holger Rune won the championship title at the Barcelona Open tennis tournament.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.