பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.04.2025

ஜி.யு.போப் 

திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம் :உழவு குறள் எண்:1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. பொருள்: உழவர் தம் தொழில் செய்யாது கை மடக்கியிருப்பாராயின் அனைவரும் விரும்பும் உணவும் இல்லை; துறவிகளுக்கு துறவுமில்லை. 

பழமொழி : இதயத்தின் மகிழ்ச்சி முகத்தை மகிழ்விக்கும்- The joy of the heart makes the face merry 

இரண்டொழுக்க பண்புகள் : 

வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 
பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம், குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன். 

 பொன்மொழி : நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள், சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டி போடும் வல்லமை கொண்டது. 

பொது அறிவு : 

1. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? விடை :விக்ரம் சாராபாய். 

2. விக்ரம் சாராபாய் முயற்சியால் தொடங்கப்பட்ட நிறுவனம் எது? விடை : இஸ்ரோ (ISRO)

English words & meanings : Reception. - வரவேற்பு Relatives. - உறவினர் 

வேளாண்மையும் வாழ்வும் : வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. 

ஏப்ரல் 24 ஜி. யு. போப் அவர்களின் பிறந்தநாள் ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் 

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் அவர்களின் பிறந்தநாள் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar About this soundஒலிப்பு (உதவி·தகவல்), பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[4] துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.[7] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே[8] மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார். 

நீதிக்கதை மெக்ஸிகோ தேசத்து மீனவன்... மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும், பாட்டுப் பாடிக்கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பானஇளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான். கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனைஅதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை. மீனவனிடம் சென்று "ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!" என்றான். அதற்கு மீனவன் "காசு கிடைச்சா...?" என்று கேட்டான். இளைஞன் "காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும்பணம் அதிகமாகசம்பாதிக்கலாம் என்று சொன்னான். மீனவன் "அதிகம் சம்பாதிச்சா....?" என்று கேட்டான். இளைஞன் பொறுமையாக "ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்" என்று சொன்னான். மீனவன் "ஏற்றுமதி செஞ்சா...?" என்று திருப்பிக் கேட்டான். இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு "ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். " என்றான். மீனவன் மறுபடியும் "இதெல்லாம் கிடைச்சா..." என்றான். இளைஞன் "உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்" என்றான். "நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்" என்றான் மீனவன். நீதி: மகிழ்ச்சி என்பது அவரவர் மனதை பொறுத்தது. நம்மை சுற்றி உள்ள பொருட்களில் இல்லை. 


இன்றைய செய்திகள் 24.04.2025 
தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு. 

ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (பிடிஏ) பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்கக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்.26-ல் நடக்கும்: வாடிகன் அறிவிப்பு. 

பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் நேற்று தொடங்கி மே 4-ந்தேதி வரை நடக்க உள்ளது. * உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர். 

Today's Headlines 

Tamil Nadu's solar power generation increased to 10,000 megawatts. 50 candidates who received training under the Tamil Nadu government's 'Naan Mudhalvan' scheme have passed the Civil Services Examination, including IAS. 

Prime Minister Modi and US Vice President Harris have welcomed the significant progress in the bilateral trade agreement (BTA) negotiations between India and the United States.

 Pope Francis's funeral will be held on April 26th: Vatican announcement. 

The Madrid Open tennis tournament, a clay-court event serving as a prelude to the French Open, began yesterday in Spain and will continue until May 4th. 

Indian shooter Simranpreet Kaur won a silver medal at the World Cup shooting competition.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.