அரசாணையில், 2022-23ஆம் ஆண்டுக்கான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த ரூ.194.65 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது.
2. இந்நிலையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் 2025-26ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கூட்டத்தொடரில் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்:-
"கடந்த நான்கு ஆண்டுகளில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் பெருமளவில் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. 2025-26ஆம் ஆண்டிலும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்".
3. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், 2022-23 ஆம் ஆண்டில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 2025-26 ஆம் ஆண்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தும் மற்றும் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உரிய அரசாணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
4. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை கவனமாகப் பரிசீலனை செய்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:-
(i) 2025-26 ஆம் ஆண்டில், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்திட ரூ.60 கோடிக்கு (ரூபாய் அறுபது கோடி மட்டும்) நிர்வாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
(ii) 2025-26ஆம் ஆண்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்திட இவ்வரசாணையின் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.