தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: விரைவில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: விரைவில் விண்ணப்பப் பதிவு தொடக்கம் 
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் தின்படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங் களில் இலவச சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கவுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனி யார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத் தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். 

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 5 லட்சம் குழந்தைகள் தனி யார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே, வரும் கல் வியாண்டுக்கான (2025-2026) இலவச சேர்க்கைக்கு இணையதள விண்ணப்பப் பதிவு ஒரு வாரத்துக்குள் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமு டியும். இத்திட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் உள்ளிட்டோர் விண்ணப் பிக்க வேண்டும். அதன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆத ரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், 3-ஆம் பாலி னத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தா மல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியமா கும். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன் கூட்டியே தயாராக வைத்து கொள்ள வேண்டும். 

இதையடுத்து விண்ணப்பப் பதிவுக்கான அறிவிப்பாணை வெளியானதும் பெற் றோர் rte.tnschools.gov.in எனும் வலைதளம் வழியாக விண் ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படை யான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார் கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.