பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத் துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்க ளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என ஆசிரியர்கள் தெரி வித்தனர்.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடை பெற்றுவருகிறது. கணிதப் பாடத்துக்கான தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் கூறுகையில், 'கணித வினாத் தாளில் மொத்தம் 14 வினாக்கள். அதில் 12 கேள்விகள் எளிதாக இருந்தன; இரு கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப் பட்டிருந்தன. இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த தலா ஒரு கட்டாய வினா கடினமாக இருந் தது. பெரிய வினாக்களைப் பொருத்தவரை (8 மதிப்பெண்) வடிவ வியல் பகுதி எளிதாகவும், வரைபடம் பகுதி சற்று யோசித்து பதி லளிக்கக் கூடியதாகவும் இருந்தது.
ஒட்டுமொத்தமாக கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்தது' என்றனர்.
இதுகுறித்து கணித ஆசிரியர்கள் கூறுகையில், இந்தத் தேர்வு 100-க்கு 100 மதிப்பெண் பெறுவதை இலக்காகக் கொண்டு படித்த மாணவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டு ஒருமதிப்பெண் கேள்விகள் முற்றிலும் மறை முகவினாக்களாக இருந்தன. இதனால் நிகழண்டு பத்தாம் வகுப்பு கணிதத்தில் சென்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிச் மாக குறைய வாய்ப்புள்ளது. இந்தத் தேர்வு மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவர்களுக்கு சிறிது கடினமாக இருந்திருக்கலாம்' என அவர்கள் தெரிவித்தனர். வரும் 15-ஆம் தேதி சமூக அறிவியல் தேர் வுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவடைகிறது.