பிளஸ்-2 முடிக்கும் மாணவ-மாணவிகள் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை எழுதி ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அதில் அரசு பள்ளி மாணவர்களும் அதிகளவில் சேர வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறை ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்காக சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறது.
அந்த வகையில் ஜே.இ.இ. அட்வாண்ஸ்டு போட்டித் தேர்வுக்கு தயார்ப்படுத்த ஏதுவாக பயிற்சியை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை இரங்கனூர், இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் வருகிற 10-ந்தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. அவ்வாறு விருப்பம் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இதுபற்றி தெரிவித்தும், அவர்களிடம் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வருகிற 9-ந்தேதிக்குள் பெறவும் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த பயிற்சி முகாமுக்கு வரும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு மாதிரிப் பள்ளி மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜே.இ.இ. அட்வாண்ஸ்டு தேர்வு: அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கல்வித்துறை ஏற்பாடு
0
April 03, 2025
Tags