எமிஸ் தளத்தில் கல்வி உதவி தொகை பெறும் மாணவர் விவரங்களை சரிபார்க்க பள்ளிகல்வித் துறை உத்தரவு
கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணை யதளத்தில் சரி பார்க்க வேண்டும் என்று பள்ளிக்கல் வித் துறை உத்தர விட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் களுக்கு அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவர்களுக் கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவ டைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல் களை எமிஸ் இணையதளத் தில் அவசியம் ஆசிரியர் கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெ னில் அதிலுள்ள விவரங்
களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக
8, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாண வர்களின் விவரங்கள் சரியாக உள் ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் பெறும் கல்வி உதவித்தொகை சார்ந்த தக வல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும்.
இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையா சிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டு தல்களை வழங்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.