உயர் கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி நான் முதல்வன் திட்டம் உயர்கல்வி வழிகாட்டி திட்டம் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி குழு அமைத்தல் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு (Career Guidance Cell) கூட்டுதல்/செயல் படுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து.

பார்வையில் காணும் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலரின் கடிதத்தில் "உயர்கல்வி வழிகாட்டி" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டி குழு (Career Guidance Cell) கடந்த 06.05.2023 முதல் செயல்பாட்டில் உள்ளதாகவும் 2022-23 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 3,97,809 அரசுப் பள்ளி மாணவர்களில், 2,72,744 (69%) அரசுப் பள்ளி மாணவர்களும், 2023-24 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 3,34,723 அரசுப் பள்ளி மாணவர்களில், 2,46,961 (74%) அரசுப் பள்ளி மாணவர்களும் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று உயர்கல்வி பயின்று வருகின்றனர் என்பது UMIS இணைய தள அறிக்கை வாயிலாக உறுதி படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (உயர் கல்வி சேர்க்கை பெற்ற / உயர் கல்வி சேர்க்கை பெறாத மாணவர்கள் விவரங்கள் இணைப்பு 1 இல் வழங்கப்பட்டுள்ளது).

மேலும், இதற்கு சீரிய முயற்சிகளையும் பங்களிப்பையும் வழங்கிய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும். அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கும். அனைத்து வகுப்பாசிரியர்களுக்கும் மற்றும் அனைத்து உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இக்கல்வியாண்டில் (2024 2025) உயர்கல்வி வழிகாட்டி குழுவின் உதவியுடன் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் உயர்கல்விக்கு செல்w கீழ்க்கண்ட செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பார்வையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களின் பொறுப்புகள்

1. தலைமையாசிரியர் / உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்:

க ) உயர்கல்வி அறிவோம்:

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வெழுதிய மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக (Hi- Tech Lab) உயர்கல்வி அறிவோம்" நிகழ்வில் (இணைப்பு 2 இல் உள்ளவாறு) பல்வேறு உயர் கல்வி படிப்புகள் மற்றும் அதில் சேருவதற்கான வழிமுறைகள் / தகவல்கள் குறித்து அந்தந்த துறைகள் சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொலிப் பதிவுகள் 01.04.2025 முதல் 30.04.2025 வரை ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிகழ்வில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கு பெறுவதையும் பங்கு பெறும் மாணவர்களின் வருகைப் பதிவை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக EMIS இணைய தளத்தில் பதிவு செய்வதையும் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கா) போட்டித் தேர்வுகள்:

இணைப்பு 3 இல் வழங்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகவும். தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் வாயிலாக உறுதி செய்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கி ) இணையவழி சான்றிதழ் படிப்புகள்:

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் இணையதள பக்கம் ( Naan Mudhalvan Portal https://portal.naanmudhalvan.tn.gov.in/nmschools/schoologin/) που 59 இணையவழி சான்றிதழ் படிப்புகள் (இணைப்பு 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இம்மாணவர்கள் தேர்வுகள் எழுதி முடித்த பின்னர் தங்களது EMIS எண்ணை பயன்படுத்தி அவர்கள் விரும்பும் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து பயனடைவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கீ) உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான

இணையவழி பயிற்சி:

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கு பிறகு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கல்வியாளர் சார்ந்த பள்ளியின் உயர் கல்வி வழிகாட்டி குழுவின் உறுப்பினர்களாக திகழ்வார்கள். அனைத்து உறுப்பினர்களின் விவரங்களும் சார்ந்த பள்ளியின் EMIS இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் தங்களை நான் முதல்வன் இணையதள பக்கம் (https://naanmudhalvan.tnschools.gov.in/) தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களால், பள்ளி அளவில் உள்ள உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் இணைய வழி பயிற்சி வருகின்ற ஏப்ரல் 2 ஆம் வாரம் முதல் 4 ஆம் வாரம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்திடவும், அவர்களின் வருகைப் பதிவை EMIS இணையதளத்தில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (இணைப்பு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள படி EMIS Attendance Demo Video)

கு) உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான பள்ளி அளவிலான கூட்டம்:

பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பள்ளி அளவிலான கூட்டம் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில். இக்குழுவின் செயல்பாடுகளையும், உயர்கல்வி வழிகாட்டி குழுவின் முக்கிய பங்களிப்புகள் குறித்தும் கலந்துரையாடி அவர்களின் வருகையை EMIS இணையதளத்தில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் பதிவிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கெ) கல்லூரிக் கனவு முகாம்:

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கல்லூரிக் கனவு முகாம் ஏப்ரல் 2 ஆம் வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்கள் (இணைப்பு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள) அனைவரும் முகாமில் கலந்து கொள்வதை உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் வாயிலாக உறுதி செய்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கே) கிராம சபை கூட்டம்:

மே 1 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கடந்த இரண்டாண்டுகள் நடைபெற்ற உயர்கல்வி சேர்க்கை பற்றியும், இவ்வருடம் நடைபெறும் உயர்கல்வி சேர்க்கை பற்றியும் கலந்துரையாடுவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். கை) உயர்கல்வி வழிகாட்டி முகாம்:

பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள். உயர்கல்விக்கும், துணைத்தேர்வுக்கும் விண்ணப்பிக்க தேவையான உதவிகள் மற்றும் ஆவணங்கள் பெற்றுத் தர அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களின் உதவியுடன் உயர்கல்வி வழிகாட்டி முகாமை மே 6 முதல் 23 ஆம் தேதி வரை நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை EMIS இணையத்தளத்தில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பதிவிட வேண்டும். (4 788 HM Survey Demo Video, உயர்கல்விக்கு விண்ணப்பிக்கக் கூடிய கல்லூரிகள், ஊக்கத் தொகை மற்றும் உதவித் தொகை திட்டங்கள், கல்விக் கடன் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது).

கொ) தொடர்ந்து கற்போம்:

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வைத்த பிறகு, அம்மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் பயிற்சி வாயிலாக சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதையும் அனைத்து மாணவர்களும் பயிற்சியில் பங்கு பெறுவதையும், துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

கோ) பாலிடெக்னிக் (பல்தொழில்நுட்பக் கல்லூரி) முகாம்:

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பு பயில விருப்பமில்லாத மாணவர்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற / பெறாத / உயர்கல்விக்கு தொடா விருப்பமில்லாத மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு சேர விரும்பினால் அவர்களுக்கென்று ஜூலை 3 ஆம் வாரம் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தால் முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் மாணவர்கள் கலந்து கொள்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். (இணைப்பு 8 இல் பாலிடெக்னிக் கல்லூரிகள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

கௌ) உயர்வுக்கு படி முகாம்:

துணைத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான பிறகு. உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் உயர்வுக்கு படி முகாமிற்கு உயர்கல்வி வழிகாட்டி குழு வாயிலாக அனைத்து மாணவர்களும் கலந்து கொள்வதையும், அவர்களின் சேர்க்கையை EMIS தளத்தில் பதிவு செய்வதையும் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். க்) உயர்கல்விக்கான ஆவணங்களை பெற்று தருதல்:

உயர்கல்விக்கு தேவையான சான்றிதழ்கள் இல்லாத மாணவர்களின் பட்டியலை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களிடம் வழங்கி அம்மாணவர்களுக்கு பள்ளிக்கு அருகாமையில் உள்ள இ சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பித்து உரிய சான்றிதழ்களை பெற்று தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.