தமிழ்நாட்டில் செயல்படாத பள்ளிகள் விபரம் சேகரிக்கும் கல்வித்துறை
தமிழ் நாட்டில் செயல்படாத, இணைக்கப்பட்ட பள்ளி கள் விபரங்களை பதிவு செய்ய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை நடவ டிக்கை எடுத்து வருகிறது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக் குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப் பதாவது:
'யுடைஸ்' இணையத ளத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசி ரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்ந்த விபரங்களை பதிவேற் றம் செய்யும் வகையில் தக்க அறிவுரைகள் வழங் சுப்பட்டுள்ளது. அதன் படி தமிழக பள்ளிகளில் அனைத்து விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணி கள் முடியும் தருவாயில் உள்ளது. 'யுடைஸ்'இணை
யதனத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பன் ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணி யாளர்கள் விபரங்களின் தரம். துல்லியம், முழுமை ஆகியவற்றை பராமரிக்க அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன.
2024-25ம் கல்வி யாண்டில் செயல்படாத. தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மூடப்பட் டுள்ள தனியார் பள் ளிகளின் இயங்குநிலை குறித்து மாவட்ட கல்வி அலுவலரின் உரிய அங் சீகாரம் பெற்று 'யுடைஸ்' இணையதளத்தில் இயங்கு நிலை பதிவேற்றம் செய்ய வேண்டும். 2024-25ம் கல்வி ஆண்டில் அருகில் இருக்கும் பள்ளியோடு இணைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏதே னும் இருப்பினும் உரிய அலுவலர் மாவட்ட கல்வி
அலுவலர் (தொடக்க கல்வி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) உரிய அங்கீகாரம் பெற்று யுடைஸ் இணையதளத் தில் இயங்குநிலை பள்ளிக ளாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் மாவட்டத் தில் அங்கீகாரம் பெற்ற புதுப்பள்ளிகள் 'யுடைஸ்' இணையதளத்தில் எவ் வித விடுப்பும் இல்லாமல் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களின் பயிற்று மொழி, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் மொழிகள் விடுதல் இன்றி இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இந்த விபரங்களை ஏப்ரல் 9ம் தேதிக்குள் முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.