தொடக்கக் கல்வி - மூன்றாம் பருவம் - தொகுத்தறி மதிப்பீடு -மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ள நாட்களில் நடைபெறும் தேர்வுகளை மாற்று தேதியில் மாற்று வினாத்தாள்கள் கொண்டு நடத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக
பார்வை: 1. சென்னை 06, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள், ந.க.எண். 018919/ஜெ2/2024, நாள் 12.03.2025
2. சென்னை 06, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள், ந.க.எண். 019428/ஜெ2/2024, நாள் 01.04.2025
3. மாவட்டக் கல்வி அலுவலர்களின் (தொடக்கக் கல்வி) கோரிக்கைகள்
பார்வை (1)யில் காணும் செயல்முறைகளின்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 08.04.2025 முதல் 24.04 2025 வரை நடைபெறும் மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டுத் தேர்வு கால அட்டவணை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) சார்பு செய்யப்பட்டது.
வெய்யிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே தொடங்க பார்வை (2)யில் கண்டுள்ள செயல்முறைகளின்படி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகம் பின்வரும் நாட்களில் உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ள நிலையில் தென்காசி, திருவாரூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஈரோடு, கோபிசெட்டிப் பாளையம், திருநெல்வேலி, வள்ளியூர், திருச்சி மற்றும் முசிறி ஆகிய தொடக்கக் கல்வி மாவட்டங்களில் மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டுத் தேர்வு கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறும் என சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.