டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு 1
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண்.01/2024 நாள் 30.01.2024 அடங்கிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் நடை சோதனை தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனை தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனை தேர்விற்கான நாள் மற்றும் நடைபெறும் இடம் தொடர்பான விபரங்கள் தேர்வாணையத்தின் இணைய தளம் மூலம் அறிவிக்கப்படும். உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனை தேர்விற்கு அழைக்கப்படும் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு 2
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள அரசு குற்ற வழக்குத் தொடர்பு துறையில் உதவி வழக்கு நடத்துநர் -நிலை -II பதவிக்கான முதன்மைத் தேர்விற்கான (எழுத்துத் தேர்வு) வினாத்தாள் (சட்டம் தாள் I முதல் IV வரை) வடிவமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான மாதிரி வடிவம் (Skeletal Question Pattern) தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் பாடத்திட்டம் (Syllabus) என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு 3
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:09/2024, நாள் 26.072024 இல் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பின்னர், சில சான்றிதழ்கள்/ ஆவணங்கள் முழுமையாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் / குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
வ.எண் பதவியின் பெயர்
1
பதவிக்குறியீடுகள்
வேதியியலாளர் மற்றும் இளநிலை வேதியியலாளர்
1913 1914
2 காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு ) 2127
3 இளநிலை பகுப்பாய்வாளர் 2006
4 பண்டகக் காப்பாளர்
எனவே. இத்தகைய தேர்வர்கள் 09.04.2025 முதல் 23.04.2025 வரை (இரவு 11.59 மணிக்குள்) விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை / ஆவணங்களைப் பதிவேற்றம் / மீள் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல், அத்தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை/ ஆவணங்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில். அத்தகைய தேர்வர்களின் கோரிக்கை (claim) / விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தேர்வர்களின் பதிவெண்களைக் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.