தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், OMR விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு
வந்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமானது OMR Answer Sheet Sample"
எனும் தலைப்பில் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில்
கருமை நிற பந்துமுனை பேனாவைப் பயன்படுத்தி கருமையாக்க வேண்டுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், OMR விடைத்தாளின் பக்கம்-1, பகுதி-II-இல்,
தேர்வர்கள் உறுதிமொழி அளித்து, கையொப்பமிட வேண்டும். மேலும், தேர்வாணையத்தால்
நடத்தப்படவிருக்கும் இனிவரும் அனைத்து OMR முறை தேர்வுகளிலும் பங்கேற்க உள்ள
தேர்வர்கள், புதிய மாதிரி OMR விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்து கொண்டு தேர்வு
எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.